தக்காளியில் இருக்கும் வைட்டமின் சி குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். எனவே குழந்தைகளுக்கு ஒரு சிறிய பழுத்த தக்காளியை சாப்பிடக் கொடுங்கள்.
கீரையில் இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்துள்ளன. எனவே குழந்தைகளின் உணவில் சில வகையான கீரைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
கேரட்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளின் கண் பார்வை, சரும் ஆரோக்கியம் மற்றும் மூளை வளர்ச்சி மேம்படுத்த உதவும்.
பீட்ரூட் ரத்த ஓட்டம் மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இதை நீங்கள் பச்சையாகவே கொடுக்கலாம் அல்லது ஜூஸ் போட்டு கொடுக்கலாம்.
இதை பச்சையாகவோ அல்லது சமைத்துக் கொடுக்கலாம். இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், அவை குழந்தைகளின் அனைத்து வகையான வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.
முள்ளங்கியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. அவை உடலில் இருந்து நச்சுக்களை நீக்கும், கெட்ட கொழுப்பை எரிக்க உதவும்.
குழந்தைகளுக்கு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப காலிஃப்ளவரை சமைத்துக் கொடுங்கள். அவர்கள் அதை விரும்பி சாப்பிடுவார்கள். அது அவர்களது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது.
பயிறு, வேர்க்கடலை, பட்டாணி போன்றவை ஊறவைத்து, முளைகட்டி கொடுங்கள். அப்போதுதான் முழுமையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் மற்றும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.