MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பள்ளி மாணவி கொலை வழக்கில் கைதான குற்றவாளி குறித்து பகீர் தகவல்.. போட்டோ வெளியானது

பள்ளி மாணவி கொலை வழக்கில் கைதான குற்றவாளி குறித்து பகீர் தகவல்.. போட்டோ வெளியானது

தர்ம முனீஸ்வரன் காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக வந்தபோது வேடநத்ததில் மாணவியை கொலை செய்துள்ளார். தற்போது அவரது புகைப்படமும் வெளியாகியுள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 19 2026, 03:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி கடந்த 10ம் தேதி வீட்டில் இருந்து இரவு வேளையில் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக் கழிக்க சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் மறுநாள் காலையில் உடலில் பல்வேறு இடங்களில் காயத்துடன் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

25
Image Credit : Asianet News

இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர் இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் யார் என்பது குறித்து மாணவியின் உறவினர்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அந்தப் பகுதி அருகே வேலை பார்த்த வட மாநில தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் கிராமம் முழுவதும் வீடு வீடாக சல்லடை போட்டு விசாரணை நடத்தினர்

Related Articles

Related image1
விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம்.. குற்றவாளி சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்
Related image2
தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு.. அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்.. இந்த 5 பேரில் ஒருவர் தான் குற்றவாளியா?
35
Image Credit : our own

இருப்பினும் குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை தொடர்ந்து திணறி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் 5 பேரிடம் டிஎன்ஏ மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுக்காக காத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன் நியமனம் செய்யப்பட்டு குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர்.

45
Image Credit : Asianet News

இந்நிலையில் வேடநத்தம் கிராமம் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு காற்றாலையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதில் சம்பவம் நடந்த அன்று அந்தப் பகுதியில் ஒரு இருசக்கர வாகனம் இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அந்த இருசக்கர வாகனத்தின் நம்பரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கண்டுபிடித்ததில் அந்த இருசக்கர வாகனம் ராம்நாடு மாவட்டம் பார்த்திபனூர் பகுதியில் இருந்து மர்ம நபரால் திருடி கொண்டுவரப்பட்டது தெரிய வந்தது. அந்த இருசக்கர வாகனம் திருடு போயிருப்பதாக காவல் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டு இருந்தது.

55
Image Credit : Asianet News

இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் சென்ற காவல்துறையினர் அங்கே இருசக்கர வாகன சிசிடிவி குறித்து ஆய்வு செய்ததில் அந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி வந்திருப்பது தெரிய வந்தது. திருடிய இருசக்கர வாகனத்தில் மர்ம நபர் அந்த காட்டு பகுதிக்கு எதற்கு வந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த மர்ம நபர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த மர்ம நபரை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவருக்கு கிராம மக்கள் யாரேனும் உதவி செய்தனரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வேடநத்தம் கிராமத்தில் 12ம் வகுப்பு மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் சாயல்குடியைச் சேர்ந்த மாவீரன் என்ற தர்ம முனீஸ்வரன் (30) என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதாகியுள்ள தர்ம முனீஸ்வரன் மீது 2020ம் ஆண்டு எட்டயபுரம் 60 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் கைதாகி தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். தர்ம முனீஸ்வரன் காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக வந்தபோது வேடநத்ததில் மாணவியை கொலை செய்துள்ளார். தற்போது அவரது புகைப்படமும் வெளியாகியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தூத்துக்குடி
குற்றம்
தமிழ்நாடு
கொலை
பள்ளி மாணவர்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.. பண்டிகைகளுக்கு முதலமைச்சர் வாழ்த்து சொல்வதில்லை
Recommended image2
Now Playing
ஜெயிப்போமா? மாட்டோமான்னு நீங்கதான் சொல்லனும்.. பிடி கொடுக்காமல் நழுவிச்சென்ற கமல்ஹாசன்
Recommended image3
ஏசி ரூம் அரசியலா..? எளிய மக்கள் அரசியலா..? தென் மாவட்ட பாசப்போராட்டத்தில் சறுக்கும் இபிஎஸ்..!
Related Stories
Recommended image1
விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம்.. குற்றவாளி சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்
Recommended image2
தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு.. அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்.. இந்த 5 பேரில் ஒருவர் தான் குற்றவாளியா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved