மறந்தும் கூட இந்த '4' காய்களை பச்சையாக சாப்பிடாதீங்க; ரொம்ப ஆபத்து!
பச்சை காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், சில காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன என்று இங்கு காணலாம்.

Vegetables That Should Never Be Eaten Raw : காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சில காய்கறிகளை நாம் சமைத்து சாப்பிடுகிறோம். சிலவற்றை நாம் பச்சையாக சாலட் வடிவில் சாப்பிடுகிறோம். ஆனால் காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதை விட அதை சமைத்து சாப்பிடுவது தான் சிறந்தது என்று பலர் கூறுகிறார்கள். பச்சை காய்கறிகள் எடை இழப்பு மற்றும் ஆரோக்கியமாக இருக்க மிகவும் உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், சில காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதை உங்களது ஆரோக்கியத்திற்கு நன்மைக்கு பதிலாக எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அவை என்னென்ன காய்கறிகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சிலுவை காய்கறிகள்
ப்ரோக்கோலி, காலிஃப்ளவர் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் தான். இவற்றை பலர் பச்சையாக சாப்பிடுவார்கள். ஆனால் இந்த காய்கறிகளை ஒருபோதும் பச்சையாக சாப்பிட கூடாது. இந்த காய்கறிகளை ஆவியில் வேகவைத்து தான் சாப்பிட வேண்டும். அப்போதுதான் அவை ஜீரணிக்க எளிதாகும். மேலும் ஊட்டச்சத்தும் முழுமையாக கிடைக்கும்.
கீரை
குளிர்காலத்தில் பெரும்பாலான மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். ஏனெனில் இவை சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இருப்பினும் பலர் இதை பச்சையாக சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அப்படி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மைக்கு பதிலாக தீங்கு தான் விளைவிக்கும். முக்கியமாக கீரையை ஜூஸாகவோ அல்லது சாலை வடிவில் பச்சையாக சாப்பிடவே கூடாது. ஏனெனில் கீரையில் அதிகளவு ஆக்சலேட்
உள்ளதால் சிறுநீரக கற்களை ஏற்படுத்தி, கால்சியம் உறிஞ்சிதலை தடுக்கும்.
இதையும் படிங்க: ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் '5' காய்கறிகள்!! சுகர் நோயாளிகள் கட்டாயம் சாப்பிடனும்
கத்தரிக்காய்
கத்தரிக்காய் கிட்டத்தை எல்லார் வீட்டு சமையலறையில் கண்டிப்பாக இருக்கும் காய்கறிகளில் ஒன்றாகும். இதை வைத்து சாம்பார், புளிக்குழம்பு, பொரியல், கூட்டு என ஏராளமான உணவுகள் செய்யப்படுகிறது. ஆனால் அதை ஒருபோதும் நீங்கள் கட்சியாக சாப்பிடவே கூடாது. அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில் கத்தரிக்காயை சோலனைன் என்ற ஆல்கலாய்டு கலவை உள்ளதால் இது ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். இதனால் இரைப்பை குடல் பிரச்சனை ஏற்படும்.
இதையும் படிங்க: இந்த '5' காய்கறிகள் போதும்.. சர்னு உடல் எடையை குறைக்கலாம்!!
காளான்
காளானை சைவ மற்றும் அசைவ உணவை பிரியர்கள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். காளான் வெவ்வேறு வழிகளில் தயாரிக்கப்படுகின்றது. ஆனால் சிலர் அதை பச்சையாக சாப்பிட விரும்புவார்கள். அப்படி சாப்பிடுவது தவறு. காளானை சமைக்காமல் ஒருபோதும் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதில் அதிகளவு பொட்டாசியம் மற்றும் சில பாக்டீரியாக்களும் உள்ளதால் வெறுமையாக சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். எனவே காளானை எப்போதும் நன்கு கழுவி சமைத்து தான் சாப்பிட வேண்டும்.