MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கு! சபாஷ் சரியான தீர்ப்பு! ஆனால்! அன்புமணி சொன்ன முக்கிய தகவல்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு! சபாஷ் சரியான தீர்ப்பு! ஆனால்! அன்புமணி சொன்ன முக்கிய தகவல்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : May 14 2025, 07:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பொள்ளாச்சி பாலியல் வழக்கு சாகும் வரை சிறை
Image Credit : google

பொள்ளாச்சி பாலியல் வழக்கு சாகும் வரை சிறை

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என கூறிய நீதிமன்றம் அவர்களுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதற்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு அளித்து வரும் நிலையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டு என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை சி்றைத் தண்டனை விதித்து கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிகக்கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

25
மின்னணு ஆவணங்களை மீட்டெடுத்த அதிகாரிகளுக்கு பாராட்டு
Image Credit : Asianet News

மின்னணு ஆவணங்களை மீட்டெடுத்த அதிகாரிகளுக்கு பாராட்டு

இந்த வழக்கில் புலன்விசாரணை நடத்திய சி.பி.ஐ., நீதிமன்றத்தில் விசாரணையை கையாண்ட அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோரின் பணிகள் பாராட்டத்தக்கவை. இந்த வழக்கில் 48 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் ஒருவர் கூட பிறழ்சாட்சியாக மாறாமல் கடைசி வரை தங்களின் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது பாராட்டப்பட வேண்டியதாகும். இந்த வழக்கில் அழிக்கப்பட்ட மின்னணு ஆவணங்களை மீட்டெடுத்து குற்றவாளிகள் தப்பிவிடாமல் தடுத்த அதிகாரிகள் பாராட்டுக்குரியவர்கள்.

Related Articles

Related image1
Crime: கோவையில் ஓடும் காரில் இருந்து தள்ளிவிடப்பட்ட வழக்கறிஞர்; பட்டப்பகலில் வெட்டி படுகொலை
Related image2
Anbumani : ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் இன்னும் வழங்கப்படவில்லை.! திமுக அரசை விளாசும் அன்புமணி
35
போதிய எண்ணிக்கையில் மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் இல்லை
Image Credit : Google

போதிய எண்ணிக்கையில் மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் இல்லை

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இப்போது நீதி கிடைத்திருக்கிறது என்றாலும் இது தாமதிக்கப்பட்ட நீதி தான். 6 ஆண்டுகளுக்குப் பிறகு தான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் போதிய எண்ணிக்கையில் மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் இல்லாதது தான். இந்த வழக்கை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றம் கூட சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்குப் பிறகு மிகவும் தாமதமாகத் தான் அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் முதல் புகார் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் நாள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 4 ஆண்டுகள் கழித்து 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் நாள் தான் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.

45
 பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 1 கோடி இழப்பீடு
Image Credit : Asianet News

பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 1 கோடி இழப்பீடு

இனி வரும் காலங்களில் பாலியல் குற்றங்கள் குறித்த வழக்குகளில் தண்டனை விரைவாக கிடைக்க வசதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மகளிர் சிறப்பு நீதிமன்றம், 300-க்கும் கூடுதலான வழக்குகள் நிலுவையில் இருந்தால் கூடுதலாக ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரூ.85 லட்சம் இழப்பீடு போதுமானது அல்ல. பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும் ரூ. 8 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை மட்டும் தான் இழப்பீடு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குற்றவாளிகளிடம் சிக்கி பல ஆண்டுகள் கொடுமையை அனுபவித்த அவர்கள், அதன்பின் கடந்த 6 ஆண்டுகளாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

55
 சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்
Image Credit : our own

சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்கள் பல காரணங்களாக புகார் அளிக்க முன்வரவில்லை. இப்போது இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், பல பெண்கள் துணிச்சல் பெற்று புகார் கொடுக்க முன்வரலாம். அவ்வாறு முன்வரும் பெண்களுக்கும் நீதி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கிலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
அரசியல்
தமிழ்நாடு
குற்றம்
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி வழக்கு

Latest Videos
Recommended Stories
Recommended image1
இன்று 13 மாவட்டங்களில் விடாமல் அடிச்சு ஊத்தப்போகும் மழை! தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட்!
Recommended image2
என்னை விட்டுடுங்க கதறிய கல்லூரி மாணவி! விடாத மூன்று கொடூரன்கள்! பரபரக்கும் இறுதி விசாரணை! தீர்ப்பு எப்போது?
Recommended image3
மாணவர்களுக்கு மதிய உணவு சீருடை வேண்டுமா? அப்படினா இது ரொம்ப முக்கியம்! பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
Related Stories
Recommended image1
Crime: கோவையில் ஓடும் காரில் இருந்து தள்ளிவிடப்பட்ட வழக்கறிஞர்; பட்டப்பகலில் வெட்டி படுகொலை
Recommended image2
Anbumani : ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் இன்னும் வழங்கப்படவில்லை.! திமுக அரசை விளாசும் அன்புமணி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved