அமித்ஷாக்கு தனது வீட்டில் தடல் புடலாக நைட் பார்ட்டி வைத்த நயினார்!
பூத் கமிட்டி மண்டல மாநாட்டிற்காக திருநெல்வேலி வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் தேனீர் விருந்து அளிக்கப்பட்டது.

நெல்லையில் அமித்ஷா
பாரதிய ஜனதா கட்சியின் மண்டல அளவிலான பூத் கமிட்டி மாநாடு திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசினார். அப்பாது அவர் கூறுகையில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக தேர்வு செய்ததற்காக பிரதமர் மோடிக்கும், நட்டாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சியாளர்கள் குற்றம் செய்தால் பதவி பறிப்பு
பிரதமர், முதலமைச்சர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று 30 நாட்களுக்கும் மேல் சிறையில் இருந்தால் பதவியைப் பறிக்கும் வகையில் புதிய மசோதா அண்மையில் கொண்டுவரப்பட்டது. இதனை எதிர்கட்சிகள் எதிர்க்கின்றன. தமிழகத்தில் அமைச்சர்கள் பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் சிறை சென்றுள்ளனர். சிறையில் இருந்துகொண்டே ஆட்சியை நடத்த முடியுமா என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும்.
உதயநிதி முதல்வராக முடியாது!
திமுக.வும், காங்கிரசும் தங்களது வாரிசுகளை அதிகாரத்தில் அமர வைக்க துடிக்கிறார்கள். உதயநிதி முதல்வராகவோ, ராகுல் பிரதமராகவோ ஒருகாலமும் ஆகமுடியாது. தமிழகத்தில் திமுக கூட்டணியை தேசிய ஜனநாயகக் கூட்டணி நிச்சயம் அவர்களை தோற்கடிக்கும் என்றார்.
நயினார் இல்லத்தில் தேநீர் விருந்து
இதனைத் தொடர்ந்து திருநெல்வேலியில் உள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அமித் ஷாவுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.