- Home
- Tamil Nadu News
- ஆசிரியர்கள் எதிர்பார்த்த குஷியான அறிவிப்பு.! ஜூலை மாதத்தில் அடிக்கப்போகுது ஜாக்பாட்
ஆசிரியர்கள் எதிர்பார்த்த குஷியான அறிவிப்பு.! ஜூலை மாதத்தில் அடிக்கப்போகுது ஜாக்பாட்
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள், ஆசிரியர் நியமனம், இல்லம் தேடிக் கல்வித் திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மாணவர்களுக்கான திட்டம்- அன்பில் மகேஷ் ஆலோசனை
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை முடிவடைந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளிகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வுக்கூட்டம் மூன்று நாள்கள் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், சேலம், மதுரை, திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பங்கேற்றன. இன்று மீதமுள்ள மாவட்டங்கள் கலந்துகொள்ளவுள்ளன.
மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்
பள்ளிக் கல்வித் துறை சார்பாக இந்தக் கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் – கல்வி உதவித்தொகைகள், பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்டவை அனைத்தும் மாணவர்களுக்குத் துல்லியமாக சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார். கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகளில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டங்களை அமைச்சர் பாராட்டினார். தேர்ச்சி விகிதம் குறைந்த மாவட்டங்களில் காரணங்களை ஆய்வு செய்து அவற்றைக் கவனத்தில் கொண்டு முன்னேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஜூலை மாதத்திற்குள் ஆசிரியர்கள் பணி நியமனம்
மேலும், காலஞ்சென்ற ஆசிரியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான நியமனம் தொடர்பான கோப்புகள் தாமதமின்றி பரிசீலனை செய்ய வேண்டும். போக்சோ வழக்குகள் தொடர்பாக விசாரணைகள் விரைவாக நடைபெற்று முடிவுக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும். நீதிமன்ற வழக்குகளின் நிலவரத்தையும் மாவட்ட அலுவலர்கள் தனிப்பட்ட முறையில் கவனிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
2346 இடைநிலை ஆசிரியர்களுக்கான நியமனம் ஜூலை மாத இறுதிக்குள் நடைபெறும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 2024-25 கல்வியாண்டில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாவட்டங்களுக்கு – முதலாம் இடம்: சேலம், இரண்டாம் இடம்: தேனி மற்றும் திருநெல்வேலி, மூன்றாம் இடம்: திருச்சிராப்பள்ளி – ஆகிய மாவட்டங்களுக்கு நினைவுப் பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்பட்டன
அரசு பள்ளியில் சேர்ந்த 3.5 லட்சம் மாணவர்கள்
தமிழகத்தில் அரசு பள்ளிகளல் தற்போது வரை 3.35 லட்சம் புதிய மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இச்சேர்க்கையை உறுதிப்படுத்திய கல்வி அலுவலர்களுக்கு பாராட்டுகள் தெரிவித்தார். குழந்தை திருமணங்களைத் தடுக்க, சமூக நலத்துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
. மேலும், பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய 38 முதன்மைக் கல்வி அலுவலர்களும் பாராட்டப்பட்டனர். அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் செயல்திறன் மேம்பாட்டுக்காக கையடக்கக் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.