- Home
- Tamil Nadu News
- ஆம்புலன்ஸ் வரும் வழியில் கூட்டத்தை போட்டுட்டு.. ஆம்புலன்ஸ் வருவதாக சொல்வதா.? இபிஎஸ்யை விளாசும் மா.சு
ஆம்புலன்ஸ் வரும் வழியில் கூட்டத்தை போட்டுட்டு.. ஆம்புலன்ஸ் வருவதாக சொல்வதா.? இபிஎஸ்யை விளாசும் மா.சு
வேலூர் பொதுக்கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்ததால் எடப்பாடி பழனிசாமி ஆவேசமடைந்தார். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை மிரட்டியதாகவும், நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுநரையே நோயாளியாக்குவோம் எனவும் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்தபோது, கூட்டத்திற்கு இடையே ஆம்புலன்ஸ் வேன் வந்த நிலையில் கோப்ப்பட்ட அவர், “ஏய் அந்த ஆம்புலன்ஸ நிறுத்துங்கப்பா. என்ன அடிக்கடி இந்த மாதிரி வந்துட்டு இருக்கீங்க? அந்த ஆம்புலன்ஸ்ல நோயாளி இருக்காங்களானு பாருங்க.
வண்டிய நிறுத்துப்பா” என்று கூறி ஆவேசமடைந்தார். இனி நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் அதனை ஓட்டு வரும் ஓட்டுநரே நோயாளியாக மாற்றப்பட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பப்படுவார் என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும் வண்டி எண், ஓட்டுநர் நம்பரை வாங்ககுங்கள் எனவும் பேசியிருந்தார்.
இந்த பேச்சு சமூகவலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆம்புலன்ஸ் வழிவிடாமல் தடுத்து நிறுத்துவது மட்டுமில்லாமல் ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு எடப்பாடி பழனிசாமி மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பான கேள்விக்கு மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி கூறுகையில்,
அவர் எங்கே போகிறாரோ அங்கு ஆம்புலன் வருவதாக தெரிவிக்கிறார் எடப்பாடி பழனிசாமி, இதில் பெரும்பாலான பகுதியில் முக்கிய சாலையில் தான் தனக்கு ஆதரவை திரட்டுவதற்காக பொதுக்கூட்டம் நடத்துகிறார். தமிழகத்தில் 1330 ஆம்புலன்ஸ் உள்ளது. விபத்து , அனைத்துமே உயிர் காக்கும் சேவையை செய்து வருகிறது. எங்கையாவது விபத்து கிராம பகுதிகளாக இருந்தாலும், நகர பகுதிகளாக இருந்தாலும் உடனடியாக செல்கிறது.
8 முதல் 10 மணித்துளிகள் சென்று உயிர்களை காக்க வேண்டும். உலகத்திலையே தமிழ்நாட்டில் இருக்கும் சேவையை போல எங்கும் இல்லை, எல்லோரும் பாராட்டுறாங்க, இதில் ஆம்புலன்ஸ் வரும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு நான் வரும் வழியில் ஆம்புலன்ஸ் விடுறாங்கனு சொல்கிறார்.
அரண்டவன் கண்ணுக்கு மிரண்டதெல்லாம் பேய் என சொல்லுவார்கள். எனவே எடப்பாடிக்கு ஆம்புலன்ஸ் பார்த்தால் வேற ஏதோ நினைவு வருகிறது போல, இது தவறான விஷயம்,. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பெயரை குறிக்க சொல்கிறார். நோயாளி பெயரை குறிக்க சொல்கிறார்.
மிரட்டும் வகையில் பேசுகிறார். முன்னாள் முதல்வர் மிரட்டும் வகையில் ஆம்புலன்ஸ் டிரைவரை பெயரை நோட் செய்ய சொல்லுவது அநாகரிமாக செயல்- இதோடு நிறுத்த வேண்டும் நல்லது. இந்த பேச்சு அவருக்கு பொதுமக்கள் இடையே கூடுதல் எதிர்ப்பை தேடி தரும், எடப்பாடியின் குவாலிட்டி குறைக்கும் வகையில் உள்ளது. மேலும் கூட்டத்திற்குள் வரும் ஆம்புலன்ஸ் டிரைவர் நோயாளியாக வீட்டிற்கு திரும்புவார் என கூறியிருக்கிறார் இதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.