- Home
- Tamil Nadu News
- ஏய் அந்த ஆம்புலன்ஸ நிறுத்துங்கப்பா! பெர்பாமன்ஸ் செய்தபோது குறுக்கே வந்த ஆம்புலன்ஸால் டென்ஷனான எடப்பாடி
ஏய் அந்த ஆம்புலன்ஸ நிறுத்துங்கப்பா! பெர்பாமன்ஸ் செய்தபோது குறுக்கே வந்த ஆம்புலன்ஸால் டென்ஷனான எடப்பாடி
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் தொண்டர்கள் மத்தியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டிருந்த நிலையில், அப்பகுதியில் மீண்டும் மீண்டும் வந்த ஆம்புலன்ஸால் பரபரப்பு.

ஏய் அந்த ஆம்புலன்ஸ நிறுத்துங்கப்பா
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். வட தமிழகம், தென் தமிழகம் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் நின்றபடி தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
ஆள் இல்லாத ஆம்புலன்ஸ்
அப்போது அவ்வழியாக 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதனால் எரிச்சலடைந்த பழிசாமி “ஏய் அந்த ஆம்புலன்ஸ நிறுத்துங்கப்பா. என்ன அடிக்கடி இந்த மாதிரி வந்துட்டு இருக்கீங்க? அந்த ஆம்புலன்ஸ்ல நோயாளி இருக்காங்களானு பாருங்க. வண்டிய நிறுத்துப்பா” என்று கூறி ஆவேசமடைந்தார்.
எச்சரித்த எடப்பாடியார்!
நோயாளிகளே இல்லாத ஆம்புலன்ஸை வேண்டும் என்றே எழுச்சிப் பயணத்தின் குறுக்கே அனுப்புகிறார்கள், அடுத்த முறை இதுபோல் நடந்தால் ஆளில்லாத ஆம்புலன்ஸ் ஆட்களை ஏற்றிச் செல்லும்
-அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி#Edappadipalaniswami | #Tiruvannamalai | #admk… pic.twitter.com/aPzqIOuP79— Naalai Namadhe (@NaalaiNamadheTN) August 18, 2025
ஒவ்வொரு கூட்டத்திலும் ஆம்புலன்ஸ்
இதனைத் தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய பழனிசாமி, இங்க மட்டும் இல்லைங்க கூட்டம் நடக்குற எல்லா இடத்துலயும் இப்படி தான் பன்றாங்க. இது தான் இவங்க வேலையே. இனி நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் அதனை ஓட்டு வரும் ஓட்டுநரே நோயாளியாக மாற்றப்பட்டு ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பப்படுவார் என்று எச்சரிக்கை விடுத்தார். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.