- Home
- Tamil Nadu News
- புஸ்ஸி ஆனந்த், சிடி நிர்மலிடம் பல முறை எச்சரித்தோம்... கேட்கவே இல்லை- போலீஸ் FIRல் முழு விவரம் இதோ
புஸ்ஸி ஆனந்த், சிடி நிர்மலிடம் பல முறை எச்சரித்தோம்... கேட்கவே இல்லை- போலீஸ் FIRல் முழு விவரம் இதோ
Vijay Karur rally stampede : கரூரில் நடிகர் விஜய் நடத்திய அரசியல் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் குறித்து போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக அரசியல் களத்தில் புதிதாக களம் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழகம் முழுவதும் உங்கள் விஜய் நான் வாரேன் என்ற தலைப்பில் மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் விஜய் செல்லும் இடமெங்கும் கட்டுக்கடங்காத கூட்டமானது கூடி வருகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டத்தில் நெரிசலில் சிக்க கொத்து கொத்தாக 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரின் முதல் தகவல் அறிக்கையான எப்ஐஆரில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதில் மாலை 06.00 மணிக்கு முனியப்பன் கோவில் ஜங்சனில் ராங்ரூட்டில் அதாவது ரோட்டின் வலது புறம் தவெகதலைவர் விஜய் வாகனங்களை அழைத்துசென்று மாலை 07.00 மணிக்கு வேலுச்சாமிபுரம் ஜங்சனில் தொண்டர்களில் கூட்டத்திற்கு நடுவே வாகனத்தை நிறுத்தி சிறிது நேரம் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததால் அதே இடத்தில் அளவுக்கு அதிகமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் பாதிப்படைந்தனர்.
அந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம் அலைமோத செய்து மக்களிடையே தேவையற்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவும் தவெக நிர்வாகிகள் செய்தனர்.
எனவே வேலுச்சாமிபுரம் பகுதியில் அசாதாரண சூழல்கள் ஏற்பட்டு கூட்ட நெரிசலால் மூச்சு திணறல் கொடுங்காயம் உயிர் சேதம் ஏற்படும் என்று தவெக கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகனிடமும் பொது செயலாளர் புஷி ஆனந்திடமும் மற்றும் இணை செயலாளர் CTR நிர்மல்குமாரிடமும் மற்றும் தவெக நிர்வாகிகள் பலரிடமும் நானும் காவல் துணைக்கண்காணிப்பாளர் பலமுறை எச்சரித்தும் அறிவுரை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாங்கள் சொன்னதை கேளாமல் தொடர்ந்து அசாதாரண செயல்களில் ஈடுபட்டதால் போதிய பாதுகாப்பில் போலீசார் வழங்கியபோதும் தவெக் தொண்டர்களுக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் எவரும் தொண்டர்களை சரிவர ஒழுங்குபடுத்தவில்லை.
கடைகளுக்கு நிழல் தரவேண்டி அமைக்கப்பட்டிருந்த குறுகிய சரிவான தகர கொட்டகைகளிலும் மற்றும் அருகிலிருந்த மரங்களிலும் கட்சி தொண்டர்கள் ஏறி உட்கார செய்ததால் தகர கொட்டகை உடைந்தும் மரம் முறிந்ததால் அதில் உட்கார்ந்திருந்த தொண்டர்கள் கீழே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது சரிந்து விழுந்துள்ளது. இதனால் பொதுமக்களில் பெரும்பாலோனோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.
தவெக கட்சியின் கரூர் ஏற்பட்டாளர்களுக்கு விஜய் அவர்களின் பொதுக்கூட்டத்திற்கு மாலை 03.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை காவல்துறை அனுமதி வழங்கப்பட்டிருந்தும் குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற கட்டாய நிபந்தனை இருந்த போதிலும் அதிக மக்கள் கூட்டத்தை வெளிப்படுத்தி அரசியல் பலத்தை பறைசாற்றும்` நோக்கத்துடன் கட்சி ஏற்பட்டாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் அவர்கள் கரூருக்கு வருவதை நான்கு மணிநேரம் தாமதப்படுத்தியதாகவும் அந்த எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.