- Home
- Tamil Nadu News
- கூட்டத்தை அதிகரிக்க வேண்டும் என்றே விஜய் தாமதமாக வந்தார்.! எஃப்ஐஆரில் ஷாக் தகவல்கள்
கூட்டத்தை அதிகரிக்க வேண்டும் என்றே விஜய் தாமதமாக வந்தார்.! எஃப்ஐஆரில் ஷாக் தகவல்கள்
Karur Vijay : தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அரசியல் பலத்தை காட்ட கூட்டம் திட்டமிட்டு தாமதப்படுத்தப்பட்டது விபத்துக்கு காரணம் என காவல்துறை FIR குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கலந்து கரூர் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே அதிரச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலையில் கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என்ன என காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், காலை 09.00 மணிக்கு பல்வேறு தொலைக்காட்சிகளில் தமிழக மக்கள் கட்சி தலைவர் விஜய் அவர்கள் மதியம் 12.00 மணிக்கு கரூர் வர இருப்பதாக சொன்னதை தொடர்ந்து காலை 10.00 மணியிலிருந்தே பொதுமக்கள் கட்சி தொண்டர்கள் பெருமளவில் வர தொடங்கினார்கள்.
காலதாமதம் செய்து மாலை 06.00 மணிக்கு முனியப்பன் கோவில் ஜங்சனில் ராங்ரூட்டில் அதாவது ரோட்டின் வலது புறம் கட்சியின் தலைவர் விஜய் வாகனங்களை அழைத்துசென்று மாலை 07.00 மணிக்கு வேலுச்சாமிபுரம் ஜங்சனில் தொண்டர்களில் கூட்டத்திற்கு நடுவே வாகனத்தை நிறுத்தி சிறிது நேரம் வேண்டுமென்றே காலதாமதம் செய்ததால் அதே இடத்தில் அளவுக்கு அதிகமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தனர்.
அந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம் அலைமோத செய்து மக்களிடையே தேவையற்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவும் செய்தனர்.
அசாதாரண சூழல்கள் ஏற்பட்டு கூட்ட நெரிசலால் மூச்சு திணறல் கொடுங்காயம் உயிர் சேதம் ஏற்படும் என்று தவெக கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகனிடமும் பொது செயலாளர் புஷி ஆனந்திடமும் மற்றும் இணை செயலாளர் CTR நிர்மல்குமாரிடமும் மற்றும் தவெக நிர்வாகிகள் பலரிடமும் நானும் காவல் துணைக்கண்காணிப்பாளர் பலமுறை எச்சரித்தும் அறிவுரை வழங்கினேன்.
நாங்கள் சொன்னதை கேளாமல் தொடர்ந்து அசாதாரண செயல்களில் ஈடுபட்டதால் போதிய பாதுகாப்பில் போலீசார் வழங்கியபோதும் தவெக் தொண்டர்களுக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் எவரும் தொண்டர்களை சரிவர ஒழுங்குபடுத்தவில்லை.
ரோட்டில் அருகிலுள்ள கடைகளுக்கு நிழல் தரவேண்டி அமைக்கப்பட்டிருந்த குறுகிய சரிவான தகர கொட்டகைகளிலும் மற்றும் அருகிலிருந்த மரங்களிலும் கட்சி தொண்டர்கள் ஏறி உட்கார செய்ததால் தகர கொட்டகை உடைந்தும் மரம் முறிந்ததால் அதில் உட்கார்ந்திருந்த தொண்டர்கள் கீழே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது சரிந்து விழுந்ததால் பொதுமக்களில் பெரும்பாலோனோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.
தவெக கட்சியின் கரூர் ஏற்பட்டாளர்களுக்கு விஜய் அவர்களின் பொதுக்கூட்டத்திற்கு மாலை 03.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை காவல்துறை அனுமதி வழங்கப்பட்டிருந்தும் குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற கட்டாய நிபந்தனை இருந்த போதிலும் அதிக மக்கள் கூட்டத்தை வெளிப்படுத்தி அரசியல் பலத்தை பறைசாற்றும் நோக்கத்துடன் கட்சி ஏற்பட்டாளர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் அவர்கள் கரூருக்கு வருவதை நான்கு மணிநேரம் தாமதப்படுத்தினர்.
அந்த நீண்ட தாமதத்தின் காரணமாக அங்கு பலமணி நேரங்களாக காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெயிலிலும் தாகத்திலும் சோர்வடைந்தனர். நீண்ட நேர காத்திருப்பு போதுமான தண்ணீர் மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் அதிக கூட்டம் காரணமாக ஏற்பட்ட அழுத்தத்தால் மக்களின் உடல்நிலையில் சோர்வடைவு ஏற்பட்டது. இதன் விளைவாக மேற்படி சம்பவத்தில் அதிகளவில் மிதிபடுதல் ஏற்பட்டு அதனால் அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். மேலும் பலருக்கு காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த எப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.