- Home
- Tamil Nadu News
- KAS தொடர்ந்து பாஜக முக்கிய பிரமுகரும், அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் தவெகவில் ஐக்கியம்! இரட்டிப்பு குஷியில் விஜய்!
KAS தொடர்ந்து பாஜக முக்கிய பிரமுகரும், அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் தவெகவில் ஐக்கியம்! இரட்டிப்பு குஷியில் விஜய்!
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். செங்கோட்டையனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களான முன்னாள் எம்.பி. சத்தியபாமா உள்ளிட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
செங்கோட்டையனுக்கு தவெகவில் முக்கிய பதவி
கட்சியில் இணைந்த செங்கோட்டையனுக்கு தவெகவில் நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் செங்கோட்டையன் வருகையால் தவெக தலைவர் விஜய் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குஷியில் இருந்து வரும் நிலையில் பாஜக முக்கிய பிரமுகரும், அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் இணைந்ததை அடுத்து அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவெகவில் பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன்
புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவராக அதிக ஆண்டுகள் இருந்தவர் சாமிநாதன். நியமன எம்எல்ஏவாகவும் இருந்து வந்தார். இவர், கடந்த சில மாதங்களாக புதுச்சேரி பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி கட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். அதைத் தொடர்ந்து அண்மையில் பாஜகவில் இருந்து விலகினார். புதுச்சேரியில் தனி அணி ஒன்றை உருவாக்க திட்டமிட்டிருந்தார்.
அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஹசானா
அதேபோல், காரைக்காலைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ அசனா, பாஜகவுடன் கூட்டணி மீண்டும் வைத்ததால் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து, வெளியேறினார். இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் ஹசானாவும், புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதனும் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.
சூடுபிடித்த தமிழக அரசியல் களம்
அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் தவெக நோக்கி வருவதால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. செங்கோட்டையன் வருகையை அடுத்து வரும் நாட்களில் மேலும் அதிமுகவில் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

