- Home
- Tamil Nadu News
- சென்னையில் கரையை கடக்கப்போகும் டித்வா புயல்? எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட்!
சென்னையில் கரையை கடக்கப்போகும் டித்வா புயல்? எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்! தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட்!
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'டித்வா' புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் வட தமிழகம், புதுச்சேரி நோக்கி நகர வாய்ப்புள்ளதால், வரும் நாட்களில் 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் அதிக மழை பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16ம் தேதி தொடங்கியது. அக்டோபர் மாதம் முதல் இடைவிடாமல் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்ததால் நீர் நிலைகளின் நீர் மட்டங்கள் கிடுகிடுவென உயர்ந்தது.
ரெட் அலர்ட் எச்சரிக்கை
பின்னர் நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து பெரிய அளவில் மழை பெய்யவில்லை. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்ததை அடுத்து வரும் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 21 செ.மீட்டருக்கு அதிகமான கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் புயல் குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது.
12 மணி நேரத்தில் புயல்
இந்நிலையில் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை அருகே அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருவாகி வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திரா நோக்கி நகர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டித்வா புயல்
இதன் காரணமாக நாளை மறுநாள் தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு ஏமன் பரிந்துரைத்த 'டித்வா என பெயரிடப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை நோக்கி வரும் 'டித்வா' புயல் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
ரெட் அலர்ட் எச்சரிக்கை
அதாவது இலங்கை அருகே உருவாகும் டித்வா புயல் சென்னை நோக்கி வரும். சென்னை அருகே கரையை கடக்குமா, கடலிலேயே நீடிக்குமா என இனிதான் தெரியும். நவம்பர் 29ம் தேதி நாகை, திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரியில் மிக கனமழையும், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், நாமக்கல், அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

