Sengottaiyan joins TVK: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்ற சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்த நிலையில் இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
தவெகவின் அதிகார மையமாக மாறிய செங்கோட்டையன்
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவில் மிகப்பெரிய சக்தியாக வலம் வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளார். கட்சியில் இணைந்த செங்கோட்டையனுக்க நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் என்ற மிக முக்கிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களுக்கான அமைப்பு பொதுச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டள்ளார்.
செங்கோட்டையனை தனிமைபடுத்திய தவெக
கட்சியில் இணைவதற்கு முன்னதாக நேற்றைய தினம் விஜய் தலைமையில் செங்கோட்டையன், புஸ்ஸி ஆந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனை முடிவில் தவெகவில் இணைய செங்கோட்டையன் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் மீண்டும் வெளியே செல்லாத வகையில் தவெகவால் தனிமைபடுத்தப்பட்டார். குறிப்பாக கட்சி அலுவலகத்திற்கு அருகில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியிலேயே செங்கோட்டையன் தங்கவைக்கப்ட்டதாக சொல்லப்படுகிறது.
ஏனென்றால் செங்கோட்டையனை தங்கள் கட்சிக்குள் கொண்டுவரும் முனைப்பில் திமுகவும் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. அவர்களது முயற்சியை முறியடிக்கும் விதமாக செங்கோட்டையன் தனிமைபடுத்தப்பட்டள்ளார்.
தமிழக அரசியலில் ஓங்கும் விஜய்யின் கை
ஒரு தேர்தலைக் கூட விஜய் சந்திக்கவில்லை என்று சொன்னால் கூட 9 முறை சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகித்த செங்கோட்டையன் தற்போது தவெகவில் இணைந்துள்ளதால் அக்கட்சிக்கு மிகப்பெரிய பலம் கிடைத்துள்ளது. மேலும் செங்கோட்டையனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் தவெகவுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் கொங்கு மண்டலம், டெல்டா மாவட்டங்கள், தென்மாவட்டங்களில் தவெக பலம் வாய்ந்ததாக மாறும் என்று கருதப்படுகிறது.


