- Home
- Tamil Nadu News
- TVKவின் பவர் சென்டராக மாறப்போகும் செங்கோட்டையன்.. அரசியலில் இன்று நிகழப்போகும் அதிசயம்
TVKவின் பவர் சென்டராக மாறப்போகும் செங்கோட்டையன்.. அரசியலில் இன்று நிகழப்போகும் அதிசயம்
விஜய்யை நேரில் சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு தவெகவில் மாநில அளவில் கட்சியை கட்டுப்படுத்தும் அளவிற்கு அதிகாரம் வழங்கப்படும் என விஜய் உத்தரவாதம் அளித்ததாக செய்தி வெளியாகி உள்ளது.

தவெகவில் இணையும் செங்கோட்டையன்..
தமிழகத்தில் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில் இணைய உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. முன்னதாக செங்கோட்டையனை தங்கள் கட்சிக்குள் வளைத்துப் போடும் எண்ணத்தில் திமுகவும் காய்களை நகர்த்தியதாகக் கூறப்படுகிறது.
கோட்டைவிட்ட திமுக
குறிப்பாக முத்துசாமி, செந்தில் பாலாஜிக்கு இணையாக செங்கோட்டையன் என்ற முக்கிய பிரமுகரும் நமக்கு கிடைக்கும் பட்சத்தில் கொங்கு மண்டலத்தில் திமுக கூடுதல் பலம் பெறும் என்ற எண்ணத்தில் திமுக தலைவர்கள் முயற்சி மேற்கொண்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த ரேஸில் தற்போது தவெக முன்னிலைப் பெற்றுள்ளது.
இன்று நடைபெறும் அரசியல் அதிசயம்
தவெகவில் இணையும் பொருட்டு தனது சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பை செங்கோட்டையன் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்து சுமார் 2 மணி நேரம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் தவெகவில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்க்கு இணையாக, குறிப்பாக மாநில அளவில் கட்சியைக் கட்டுப்படுத்தும் வகையில் பதவி வழங்குபவதாக விஜய் உத்தரவாதம் அளித்ததாக சொல்லப்படுகிறது.
விஜய்யின் உத்தரவாதத்தால் குஷியடைந்த செங்கோட்டையன் இன்று தவெகவில் இணையப்போவதாக தகவல்கள் வருகின்றன.

