அண்ணாமலை போட்ட புது ரூட்.! ஷாக்காகி நிற்கும் பாஜக தலைவர்கள்
தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அண்ணாமலைக்கு, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் ரசிகர் நற்பணி மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. "தமிழ்நாட்டின் அரசியல் சூப்பர் ஸ்டார்" என்ற வாசகங்களுடன் ஒட்டப்பட்டுள்ள

நாடு முழுவதும் 14 மாநிலங்களில் பாஜக ஆட்சி புரிந்து வருகிறது. மேலும் பல மாநிலங்களில் கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. அந்த வகையில் தென் மாநிலங்களில் ஆட்சியை அமைக்க பாஜக திட்டமிட்டு காய் நகர்த்தியது.
அந்த வகையில் 2014ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியை பிடித்த பாஜக, தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலங்களை குறி வைத்தது. அந்த வகையில் தமிழகத்தில் அதிரடி அரசியல் மேற்கொள்ளும் வகையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலையை தமிழக பாஜக தலைவராக நியமித்தது.
அண்ணாமலையும் ஆளுங்கட்சியான திமுகவிற்கு கடும் சவாலாக இருந்தார். தினந்தோறும் அறிக்கை, போராட்டம், ஆடியோ, வீடியோ என அதிரடி காட்டினார் அண்ணாமலை, இதன் காரணமாக பாஜகவானது தமிழகம் முழுவதும் வளர்ச்சி அடைந்தது, இளைஞர்கள் அண்ணாமலை பக்கம் திரும்பினார்கள்.
இந்த நிலையில் தான் தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி பாஜக தேசிய தலைமை அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. ஆனால் இந்த கூட்டணிக்கு இடையூறாக அண்ணாமலை இருந்ததால் அவரை மாநில தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். புதிய தலைவராக முன்னாள் அதிமுக அமைச்சராக இருந்த நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அரசியல் நிகழ்வுகளில் பெரிய அளவில் பங்கேற்காமல் அண்ணாமலை ஒதுங்கியுள்ளார். ஒரு சில கூட்டங்களில் மட்டுமே கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகர் பகுதி முழுவதும் பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு ரசிகர் நற்பணி மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
"தமிழ்நாட்டின் அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை" " மக்கள் தலைவர்" என்பது உள்ளிட்ட வாசகங்களுடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ரசிகர் மன்றத்தில் இணைய செல்போன் எண் கொடுத்து மன்றத்தில் சேருவதற்கும் அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த போஸ்டரில் "தமிழ்நாட்டின் அரசியல் சூப்பர் ஸ்டார்" "மக்கள் தலைவர் "அண்ணாமலை தலைமை ரசிகர் சமூக சேவை நற்பணி மன்றம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இது குறித்து பாஜக கட்சியினரிடம் கேட்ட போது அண்ணாமலை மீதுள்ள தனிப்பட்ட விருப்பத்தால் இந்த மன்றத்தை தொடங்கி உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். ஒரு அரசியல் கட்சி தலைவர் பெயரில் ரசிகர் மன்றம் தொடங்கிய சம்பவம் ஆண்டிப்பட்டி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.