- Home
- Tamil Nadu News
- கல்வி அமைச்சர் லெஃப்ட் பாண்டி..,! தேனி தவெக நிர்வாகியின் அலப்பறைக்கு அளவே இல்லையா?
கல்வி அமைச்சர் லெஃப்ட் பாண்டி..,! தேனி தவெக நிர்வாகியின் அலப்பறைக்கு அளவே இல்லையா?
விஜய் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டியை 'நாளைய கல்வித்துறை அமைச்சர்' என சித்தரிக்கும் போஸ்டர் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டரின் உண்மை தன்மை கேள்வியை எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார் விஜய், இதற்காக கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த விஜய்,
விக்கிரவாண்டி, மதுரையில் பிரம்மாண்ட அளவில் மாநாட்டை நடத்தி நாட்டையே திரும்பி பார்க்கவைத்தார். இதனை தொடர்ந்து திமுக- அதிமுக ஆகிய கட்சிகளுக்கு போடியாக கிளைக்கழகம் முதல் மாநிலம் வரை நிர்வாகிகள் நியமித்து அசத்தினார். மேலும் மாவட்ட செயலாளர்களை நியமித்தும் அதிரடி காட்டினார் விஜய்,
இந்த நிலையில் கரூரில் விஜய் கலந்து கொண்டுள்ள கூட்டத்தில் அதிகளவிலான கூட்டம் கூடியதால் மூச்சு திணறி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சி அடைய செய்துள்ள நிலையில், தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனைடுத்து புஸ்ஸி ஆனந்த், சிடி நிர்மல் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமறைவாக உள்ளனர்.
எனவே எந்த நேர்த்திலும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தவெக தேனி மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டி பிறந்தநாளையொட்டி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் அந்த போஸ்டரில் நாளைய கல்வி துறை அமைச்சரே DR.LEFT பாண்டி என அவரது ஆதரவாளர்கள் வாழ்த்தி போஸ்டர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
தற்போது உள்ள நிலையில் இது தேவையா என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள். ஏற்கனவே லெஃப்ட் பாண்டி மீது பல்வேறு புகார்கள் ஏற்கனவே உள்ளது.குறிப்பாக பிறந்தநாளையொட்டி பொதுமக்களுக்கு தொந்தரவு செய்யும் வகையில் பொது வெளியில் பிரம்மாண்ட மாலை அணிவித்து கொண்டாடியது.
தவெக பெண் தொண்டரை ஒருமையில் விமர்சித்தது என பல புகார்கள் உள்ளது. ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த போஸ்டர் புதியது இல்லையெனவும், கடந்த ஆண்டு ஒட்டப்பட்ட போஸ்டரை தற்போது சிலர் வேண்டும் என்றே சமூக வலைதளங்களில் பரப்பி வருவதாக கூறப்படுகிறது.