திருமாவுக்கு Z பிளஸ் பாதுகாப்பு கொடுங்கள்..! விசிக தொண்டர்கள் போராட்டம்..!
தனியார் நபர்கள் கோர முடியாது. அச்சுறுத்தல் அதிகரித்தால் மட்டுமே அளிக்கப்படும். இந்த வகைப்பாதுகாப்பை திருமாவளவனுக்கு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் விசிகவினர்.

வழக்கறிஞரை அடித்து விரட்டிய விசிக
நேற்று சென்னை உயர்நீதிமன்றம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பயணித்த கார், ஒரு வழக்கறிஞரின் ஸ்கூட்டரை மோதியது. இதைத் தொடர்ந்து, வழக்கறிஞர் காரை மறித்து விளக்கம் கேட்டதற்காக, திருமாவளவன் உடன் இருந்த விசிகவினர் வழக்கறிஞரை சூழ்ந்து வாக்குவாதம் செய்தனர். அவரது ஸ்கூட்டரை இழுத்து தள்ளி சேதப்படுத்தினர். பின்னர், வழக்கறிஞரை அடித்து துரத்தினர். வழக்கறிஞர் நீதிமன்ற உள்ளே தஞ்சம் அடைந்தார்.
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, இதை "பட்டப்பகலில் விசிக ரவுடிகள் தாக்குதல்ப் நடத்தியுள்ளனர். திருமாவளவன் மற்றும் அவரோடு சேர்ந்த குண்டர்களை கைது செய்ய வேண்டும்" என கண்டனம் தெரிவித்தார். இந்நிலையில், ‘‘பிரச்னை செய்தது அந்தத் தம்பிதான்.. இருசக்கர வாகனம் மீது எனது கார் மோதியதாக வெளியான தகவல் தவறு. ஊடகங்கள் வேண்டுமென்றே அவதூறு பரப்புகின்றனர்" என வி.சி.க தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
முட்டாளாக நினைக்கும் விசிக
தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து விருகின்றனர். இந்நிலையில், திருமாவளவனுக்கு பாதுகாப்பில்லை எனக்கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவருக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை கிளப்பி உள்ளது.
திருமாவளவன் கார் சென்னையில் மறிக்கப்பட்டதால், அவருக்கு Z பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி விசிக-வினர் நாகூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். நாகை-நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு கோரி தமிழக, ஒன்றிய அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ‘‘எந்த அளவுக்கு மக்களை முட்டாள்கள் என்று நினைத்தால், வீடியோவில் பதிவாகியுள்ள இந்த ரவுடித்தனத்தை நியாயப்படுத்திப் பேசுவார்கள் விசிக கட்சியினர்’’ என இதனை கண்டித்துள்ளனர் பலரும்.
இசட் பிளஸ் பாதுகாப்பு என்றால் என்ன?
சரி இசட் பிளஸ் பாதுகாப்பு என்றால் என்னவென்று விசிகவினருக்கு தெரியுமா? இந்தியாவில் Z+ பாதுகாப்பு, அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள், பெரிய அச்சுறுத்தல் கொண்ட நபர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச பாதுகாப்பு நிலை. இது SPG (Special Protection Group)க்கு அடுத்து வரும் உயர்ந்த பாதுகாப்பு. அச்சுறுத்தல் மதிப்பீட்டின் அடிப்படையில் உளவுத்துறை போன்ற அமைப்புகள் இதை வழங்குகின்றன. Z+ பாதுகாப்பில் 55-க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
அதில் 10-க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு கமாண்டோக்கள், சிஆர்பிஎஃப் போன்ற மத்திய ராணுவ படைகள், போலீஸ் அதிகாரிகள் ஈடுபடுவர். அவர்கள் 24 மணி நேர கண்காணிப்பில் இருப்பார்கள். புல்லட்-ப்ரூஃப் வாகனங்கள், ஏரோபிளேன்/ஹெலிகாப்டர் பாதுகாப்பு வழங்கப்படும். ASL போன்ற கூடுதல் அடுக்கு சிலருக்கு வழங்கப்படும். கான்வாய் மற்றும் தங்குமிட பாதுகாப்பு வழங்கப்படும்.
யார் யாருக்கு பாதுகாப்பு..?
இந்தியாவில் Z+ பாதுகாப்பு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், ஆன்மீக தலைவர் தலாய் லாமா, ஜனாதிபதி திரெளபதி முர்மு ஆகியோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. Z+ பாதுகாப்பு அரசு மட்டுமே வழங்கும். தனியார் நபர்கள் கோர முடியாது. அச்சுறுத்தல் அதிகரித்தால் மட்டுமே அளிக்கப்படும். இந்த வகைப்பாதுகாப்பை திருமாவளவனுக்கு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் விசிகவினர்.