- Home
- Tamil Nadu News
- தொகுதிக்கு 30 லட்சம் 234 க்கு 600 கோடி..!திமுக பூத் ஏஜென்ட்களுக்கு ஜாக்பாட்.. அலறும் அதிமுக
தொகுதிக்கு 30 லட்சம் 234 க்கு 600 கோடி..!திமுக பூத் ஏஜென்ட்களுக்கு ஜாக்பாட்.. அலறும் அதிமுக
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் களத்தில் இறங்க தொடங்கியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், கட்சிகளின் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சரியாக 9 மாத காலமே உள்ளது. இதனையடுத்து தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. ஒரு பக்கத்தில் கூட்டணி தொடர்பாக ரகசிய பேச்சுவார்த்தையானது நடைபெற்று வருகிறது. மற்றொரு பக்கத்தில் தேர்தல் பிரச்சார பயணத்தை அரசியல் கட்சிகள் முன்கூட்டியே ஒன்றன் பின் ஒன்றாக தொடங்கி வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தை காப்போம் மக்களை மீட்போம் என தொகுதிவாரியாக பிரச்சார கூட்டத்தை அதிமுக சார்பாக அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார். இதே போல திமுக சார்பில் ஓரணியில் தமிழகம் என்ற தலைப்பில் 2.5 கோடி மக்களை திமுகவில் சேர்க்கும் பணியை அக்கட்சி தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
மக்களை சந்திக்க புறப்படும் கட்சிகள்
அடுத்ததாக திமுக- அதிமுகவிற்கு போட்டியாக அரசியல் களத்தில் குதித்துள்ள நடிகர் விஜய், ஆகஸ்ட் மாதம் தனது இரண்டாவது மாநில மாநாட்டை அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து செப்டம்பர் முதல் டிசம்பர் வரை தமிழகம் முழுவதும் பொதுமக்களை சந்திக்கவுள்ளார். இதற்கான பயண திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாமக தலைவர் அன்புமணியும் வட மாவட்டங்களில் நடை பயணம் செய்து வருகிறார். தேமுதிக தலைவர் பிரேமலதாவும் தமிழகம் முழுவதும் பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டு வருகிறார். அனைத்து அரசியல் கட்சிகள் களத்தில் இறங்க தொடங்கியுள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஜாக்பாட்
இதற்கிடையே ஒவ்வொரு கட்சியியும் வாக்குச்சாவடி முகவர்கள், செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு தலைமையால் செமையாக கவணிக்கப்பட்டு வருகிறது. சிக்கன், மட்டன் பிரியாணி முதல் சரக்கு, பணம் என படு ஜோராக பரிசு மழை கொட்டி வருகிறது. ஏனென்றால் தலைவர்கள் என்ன தான் வேலை செய்தாலும் கட்சியின் முகவர்கள் தான் வாக்குகளை சரியான வகையில் கட்சிக்கு கொண்டு சேர்க்க முடியும்.
எனவே கட்சியின் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு தற்போது ஜாக்பாட் அடித்து வருகிறது. திமுக சார்பாக ஒரு தொகுதிக்கு 30 லட்சம் வீதம் 234 தொகுதிக்கு 600 கோடிக்கு மேல் திமுக தனது பூத் முகவர்களுக்கு செலவு செய்து வருவதாக தகவல் கூறப்படுகிறது
பூத் முகவர்களுக்கு பரிசு மழை
இந்த நிலையில் திமுக தனது பூத் முகவர்களுக்கு மொபைல் போன், வாட்ச், பணம், குடை உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கியுள்ளது. இந்த வீடியோக்கள் தற்போது சமூகவலைதளங்களில் வரைலாகி வருகிறது. இந்த வீடியோவை எதிர்கட்சியினர் வாக்காளர்களுக்கு இப்போதே திமுக பணம் கொடுத்து வருவதாக பரப்பி வருகிறது.
இதனிடையே 200 தொகுதியை இலக்காக கொண்டு களம் இறங்கிய திமுக பணத்தால் விளையாடி வரும் நிலையில் அதிமுகவும் டப் கொடுக்க திட்டமிட்டு வருகிறது. அதிமுக தலைமை திமுகவிற்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்களது முகவர்களையும் செமையாக கவணிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. எனவே யார் காட்டில் மழையோ இல்லையோ அரசியல் கட்சி பூத் நிர்வாகிகளுக்கு கொண்டாட்டம் தான்