- Home
- Tamil Nadu News
- அடேங்கப்பா.. தமிழகத்தில் 60ஆயிரம் பேருக்கு வேலை.! 30ஆயிரம் கோடி முதலீடு- அசத்தும் ஆப்பிள் நிறுவனம்
அடேங்கப்பா.. தமிழகத்தில் 60ஆயிரம் பேருக்கு வேலை.! 30ஆயிரம் கோடி முதலீடு- அசத்தும் ஆப்பிள் நிறுவனம்
தமிழகத்தில் ஆப்பிள் நிறுவனம் ரூ.30,000 கோடியில் மின்னணு உதிரிபாக தொழிற்சாலைகள் தொடங்க உள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இதன் மூலம் 60,000 பேருக்கு வேலைவாய்ப்பு என்றும், 'பிராண்ட் தமிழ்நாடு' உலக அளவில் பிரபலமாகிவிட்டதாகவும் கூறினார்.

தமிழகத்தில் தொழில் முதலீடு
தமிழக அரசு 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்துவதை முதன்மை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்காக தொழில்துறை முதலீட்டை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மற்றும் சிப்காட் போன்ற அமைப்புகள் மூலம் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி, மானியங்கள், மற்றும் தொழிற்பூங்காக்களில் நில ஒதுக்கீடு போன்றவை வழங்கப்படுகின்றன.
ஆப்பிள் மின்னணு உதிரிபாகம்
தொழில்மயமாக்கல் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், வாகனத் தொழில், மின்னணு உற்பத்தி, மென்பொருள், மற்றும் பசுமை தொழில்நுட்பம் போன்ற துறைகளில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகளை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. சென்னை, கோயம்புத்தூர், மற்றும் திருப்பெரும்புதூர் போன்ற பகுதிகள் தொழில் மையங்களாக வளர்ந்து வருகின்றன.
அந்த வகையில் தமிழகத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு உதிரிபாக தொழிற்சாலைகள் தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரிபாக தொழிற்சாலைகளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், ஆப்பிள் மின்னணு உதிரிபாக ஆலைகள் மூலம் 60,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகிறது என கூறினார்.
பிராண்ட் தமிழ்நாடு
இது தொடர்பாக ஆங்கில நாளிதழுக்கு டிஆர்பி ராஜா அளித்துள்ள பேட்டியில், மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான முக்கிய மையமாக தமிழ்நாடு உருவாகிறது பெருமை பட தெரிவித்தார். 2023-ல் பொறுப்பேற்றபோது, ஆப்பிள் நிறுவனத்தை தமிழகத்திற்கு கொண்டு வருவதே எனது முதல் குறிக்கோளாக இருந்தது. அதை தற்போது வெற்றிகரமாக முடித்துவிட்டோம். அடுத்தக்கட்டமாக அதிக ஆப்பிள் சப்ளையர்கள் எங்களைத் தொடர்பு கொள்கிறார்கள், ஏனெனில் 'பிராண்ட் தமிழ்நாடு' உலக அளவில் பிரபலமாகிவிட்டது" என கூறினார் . மேலும் மின்னணுவில், தமிழ்நாடு ஈடு இணையற்ற ஜாம்பவான்களாக இருந்து வருகிறோம்,
50 பில்லியன் டாலர்கள் -எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி
இந்தியாவின் பங்கில் 41 சதவீதம் தமிழகத்தில் இருந்து வருவதாக தெரிவித்தார். 2025 ஆம் நிதியாண்டை பொருத்தவரை தமிழ்நாட்டிலிருந்து 14.65 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன, அடுத்த 3 ஆண்டுகளுக்குள் தமிழ்நாடு 50 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்யும் எனவும் டிஆர்பி ராஜா குறிப்பிட்டுள்ளார்.