தீபாவளிக்கு முந்தைய நாளும் விடுமுறை: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு - எந்தெந்த பகுதி தெரியுமா?
தீபாவளி பண்டிகை வருகின்ற 31ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் தீபாவளிக்கு முந்தைய நாளான 30ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Schools Holiday
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகின்ற 31ம் தேதி (வியாழன் கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. குறிப்பாக தலைநகர் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
School holiday
இதனிடையே இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வியாழன் கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் வெளியூர்களுக்கு பயணம் செல்பவர்களின் வசதியை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாளான வெள்ளி கிழமை தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் பள்ளி, கல்லூரிகள், இதர கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்களுக்கு கூடுதலாக 1 நாள் விடுமுறை கிடைத்துள்ளது.
School Holiday
நவம்பர் 1ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டதால் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை என்ற நிலை ஏற்பட்டது. வெள்ளி கிழமை அளிக்கப்படும் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 9ம் தேதி சனிக் கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளிக் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டதற்கு சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் தீபாவளிக்கு முந்தைய தினமான புதன் கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Schools Holiday
மேலும் பல்வேறு தரப்புகளில் இருந்தும் தீபாவளிக்கு முந்தைய நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், வருகின்ற 30ம் தேதி (வெள்ளி கிழமை) விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Muthuramalinga Thevar
இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117வது பிறந்த நாள் மற்றும் 62வது குருபூஜை விழா வருகின்ற 30ம் தேதி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்பத்தூர், மானாமதுரை, காளையார்கோவில், இளையான்குடி ஆகிய ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூகளுக்கும் விடுமுறை” அளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.