MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மாணவர்களுக்கு குட் நியூஸ்: அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு - எத்தனை நாள் தெரியுமா?

மாணவர்களுக்கு குட் நியூஸ்: அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிப்பு - எத்தனை நாள் தெரியுமா?

தமிழகத்தில் அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு, தேர்வு விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Velmurugan s
| Updated : Oct 12 2024, 06:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Anbil Mahesh

Anbil Mahesh

தமிழகத்தில் பொதுவாக மே, ஜூன் மாதங்களில் அரசு, தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுவது வழக்கம். மேலும் தனியார் பள்ளிகள் விஜயதசமி பண்டிகையின் போதும் பல்வேறு சலுகைகளை வழங்கி மாணவர் சேர்க்கையில் ஈடுபடுவர். இந்நிலையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை மேம்படுத்தும் வகையில் அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

24
Government School

Government School

இதன் ஒருபகுதியாக விஜயதசமி பண்டிகை தினமான இன்றும் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு ஆரம்பப் பள்ளிகளும் திறந்திருக்கும் என்றும், இன்றைய தினம் அரசுப் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அதன்படி அந்தந்த மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

School Holiday: பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை குறித்து சூப்பர் அறிவிப்பு வெளியானது!
 

34

அரசு, தனியார் பள்ளிகளில் தற்போது இரண்டாம் பருவத்திற்கான பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது ஒருபுறம் இருக்க அரையாண்டு தேர்வு, தேர்வுக்கான விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி டிசம்பர் 16ம் தேதியான திங்கள் கிழமை அரையாண்டு தேர்வுகள் தொடங்க உள்ளன.

மகளிர் உரிமை தொகையில் மேலும் 1000 ரூபாய் - உடனே விண்ணப்பிக்கவும்
 

44
Government School

Government School

தேர்வுகள் டிசம்பர் 23ம் தேதியுடன் நிறைவு பெறும் நிலையில் டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி புதன் கிழமை வரை என 9 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். பின்னர் ஜனவரி 2ம் தேதி வியாழன் கிழமை முதல் மூன்றாம் பருவத்திற்கான பாடங்கள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளிக் கல்வித் துறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
சென்னையில் அதிர்ச்சி! பிசினஸ்மேன் மனைவியை கரெக்ட் செய்த திலிப்.. நினைக்குப்போதெல்லாம்! வெளியான அதிர்ச்சி தகவல்!
Recommended image2
தகைசால் தமிழர் தோழர் நல்லக்கண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை..! முதல்வர் அறிவிப்பு
Recommended image3
பள்ளி மாணவர்கள்.. அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மார்ச் 4, 10ம் தேதி விடுமுறை..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved