MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கோவை சிறுமி கொ**லை! நடந்தது என்ன? மனித மிருகங்கள் சிக்கியது எப்படி? பதற வைக்கும் தகவல்!

கோவை சிறுமி கொ**லை! நடந்தது என்ன? மனித மிருகங்கள் சிக்கியது எப்படி? பதற வைக்கும் தகவல்!

Coimbatore Minor Girl Murder Case: கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. நடந்தது என்ன? இரண்டு மனித மிருகங்கள் சிக்கியது எப்படி? என்பது குறித்து பார்ப்போம். 

2 Min read
Author : Rayar A
Published : May 23 2026, 05:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கோவை சிறுமி கொலை
Image Credit : Asianet News

கோவை சிறுமி கொலை

கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கியுள்ளது. அதாவது சூலூர் அருகே கண்ணம்பாளையத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, நேற்று முன்தினம் மாலை கடைக்கு சென்ற நிலையில், வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் பதறிப்போன பெற்றோர் சூலூர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கண்ணம்பாளையத்தில் ஒரு குளத்தின் கரையில் சிறுமி பிணமாக கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாலியல் வன்கொடுமை

சிறுமியின் உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சுமார் 500க்கு மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இருவர் சிறுமியை கடத்தி சென்று கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. பின்பு தனிப்படைகள் களமிறங்கிய நிலையில், சிறுமியை கொலை செய்த பக்கத்து வீட்டை சேர்ந்த கார்த்திக் (33), அவனது நண்பன் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
நடந்தது என்ன?
Image Credit : Google

நடந்தது என்ன?

கைதான மனித மிருகங்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது கார்த்தி சிறுமியின் பக்கத்து வீட்டி வசித்து வந்துள்ளான். ஒரு வாரத்துக்கு முன்பு தான் வீட்டை காலி செய்துள்ளான். சம்பவத்தன்று அவன் கடைக்கு சென்ற சிறுமியை சாக்லேட் வாங்கித் தருவதாக கூறி பைக்கில் அழைத்து சென்றுள்ளான். ஏற்கெனவே பக்கத்து வீட்டில் அறிமுகமானவன் என்பதால் சிறுமியும் அவன் உடன் சென்றுள்ளார். பின்னர் கார்த்தியும், மோகன்ராஜும் சிறுமியை ஒரு தென்னந்தோப்புக்கு அழைத்து சென்று பாலியன் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

Related Articles

Related image1
பள்ளி மாணவி கொலை வழக்கில் கைதான குற்றவாளி குறித்து பகீர் தகவல்.. போட்டோ வெளியானது
Related image2
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. ஜாமீனில் வந்த முக்கிய ரவுடி.. பெங்களூர் ஏர்ப்போட்டில் சுத்துப்போட்ட போலீஸ்.. நடந்தது என்ன?
34
மனித மிருகங்கள் சிக்கியது எப்படி?
Image Credit : x

மனித மிருகங்கள் சிக்கியது எப்படி?

சம்பவம் நடந்த 24 மணி நேரத்தில் இந்த மனித மிருகங்களை போலீசார் கைது செய்தனர். சிறுமி காணாமல் போன உடனே, மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிறுமி கடைசியாகச் சென்ற மளிகைக் கடை மற்றும் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது கார்த்தி சிறுமியை அழைத்து சென்றது தெரியவந்தது. இதுதான் வழக்கின் திருப்புமுனையாகும். இதனைத் தொடர்ந்து கண்ணம்பாளையம் மெர்லின் கார்டன் பகுதியில் பதுங்கி இருந்த கார்த்தியை கைது செய்தனர். இதேபோல் மோகன்ராஜும் கைது செய்யப்பட்டான்.

44
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசம்
Image Credit : CM Vijay FB

தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசம்

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்று சில நாட்களுக்குள் சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலையை கேள்விக்குறியாக்கியுள்ளது. தவெக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீரழிந்துள்ளதாக திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக இதுபோன்ற கொடூரச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்யும் என்று முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
கோயம்புத்தூர்
தமிழ்நாடு
காவல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
பேசுவதற்கு சுதந்திரம் இல்லை.....சென்னையில் நடக்கும் இந்த போராட்டம் போலியானது ! சனம் ஷெட்டி ஆவேசம்
Recommended image2
NEET Exam: 'நீட் தேர்வில் முறைகேடு இல்லை, நீட் தேர்வே ஒரு முறைகேடு' - திமுக எம்.பி. கனிமொழி ஆவேசம்!
Recommended image3
Now Playing
NEET போராட்டத்தில் சர்ச்சை..! சனம் ஷெட்டியை மேடையிலிருந்து வெளியேற வைத்தது என்ன?
Related Stories
Recommended image1
பள்ளி மாணவி கொலை வழக்கில் கைதான குற்றவாளி குறித்து பகீர் தகவல்.. போட்டோ வெளியானது
Recommended image2
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. ஜாமீனில் வந்த முக்கிய ரவுடி.. பெங்களூர் ஏர்ப்போட்டில் சுத்துப்போட்ட போலீஸ்.. நடந்தது என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved