MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. ஜாமீனில் வந்த முக்கிய ரவுடி.. பெங்களூர் ஏர்ப்போட்டில் சுத்துப்போட்ட போலீஸ்.. நடந்தது என்ன?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. ஜாமீனில் வந்த முக்கிய ரவுடி.. பெங்களூர் ஏர்ப்போட்டில் சுத்துப்போட்ட போலீஸ்.. நடந்தது என்ன?

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமினில் இருந்த முக்கிய குற்றவாளியான அஸ்வத்தாமன், பாங்காக் தப்பிச் செல்ல முயன்றபோது பெங்களூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

1 Min read
Author : vinoth kumar
Published : Apr 30 2026, 12:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : our own

கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன், பொன்னை பாலு உள்ளிட்ட 29 பேர் மீது காவல்துறை குற்றம் சாட்டினர். இதில் 27 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் திருவேங்கடம் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மேலும் சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணன் உள்ளிட்ட இரண்டு பேர் இதுவரை தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

24
Image Credit : our own

இதுதொடர்பாக வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏ1 குற்றவாளியான நாகேந்திரன் சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் முக்கிய குற்றவாளியான சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று மாலை பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பாங்காக் செல்ல முயன்ற அவரை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து பெங்களூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

Related Articles

Related image1
கோவையில் விடாமல் கொட்டி தீர்க்கப்போகும் கோடை மழை.. லிஸ்ட்டில் எந்தெந்த மாவட்டங்கள் இருக்கு தெரியுமா?
Related image2
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது.. மீண்டும் முதல்வராகிறார் ஸ்டாலின்.. தவெக? அதிமுக? நிலை என்ன?
34
Image Credit : ANI

பின்னர் பெங்களூர் போலீசார் சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் எம்கேபி நகர் போலீசார் பெங்களூர் விரைந்து சென்று அஸ்வத்தாமனை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

44
Image Credit : our own

ஒவ்வொரு திங்கட்கிழமையும் அஸ்வத்தாமன் நீதிமன்றத்தில் கையொப்பமிட வேண்டும். அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை அவர் நீதிமன்றத்தில் கையொப்பமிட்டுள்ளார். மீண்டும் அடுத்த திங்கட்கிழமை கையொப்பம் இட வேண்டிய நிலையில் பாங்காக் தப்பித்து செல்ல முயற்சி செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு
குற்றம்
காவல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கோவையில் விடாமல் கொட்டி தீர்க்கப்போகும் கோடை மழை.. லிஸ்ட்டில் எந்தெந்த மாவட்டங்கள் இருக்கு தெரியுமா?
Recommended image2
த.வெ.க-விற்கு 37 இடங்கள் கிடைத்தால் விஜய் முதலமைச்சரா? 2018ல் கர்நாடகாவில் என்ன நடந்தது தெரியுமா?
Recommended image3
புதுச்சேரியில் விஜய்யின் தவெக-வுக்கு எத்தனை சீட்கள்.? ஆட்சியை தக்க வைக்கிறதா என்டிஏ? வெளியான கருத்துக் கணிப்பு
Related Stories
Recommended image1
கோவையில் விடாமல் கொட்டி தீர்க்கப்போகும் கோடை மழை.. லிஸ்ட்டில் எந்தெந்த மாவட்டங்கள் இருக்கு தெரியுமா?
Recommended image2
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது.. மீண்டும் முதல்வராகிறார் ஸ்டாலின்.. தவெக? அதிமுக? நிலை என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved