MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TRB: சிறப்பு டெட் தேர்வு! காலை 9.30 தாண்டினால் நோ என்ட்ரி! பெல்ட், ஷூ-வுக்கு தடை... டிஆர்பி வெளியிட்டுள்ள முக்கிய கட்டுப்பாடுகள்!

TRB: சிறப்பு டெட் தேர்வு! காலை 9.30 தாண்டினால் நோ என்ட்ரி! பெல்ட், ஷூ-வுக்கு தடை... டிஆர்பி வெளியிட்டுள்ள முக்கிய கட்டுப்பாடுகள்!

TET Exam: தமிழ்நாட்டில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசாணை வெளியிட்டது. அதன்படி, கடந்த பிப்ரவரி 13-ம் தேதி அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இதற்கான தேர்வு இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது.

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 04 2026, 08:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு
Image Credit : our own

ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு

ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றுவதற்கு எழுத வேண்டிய ஒரு கட்டாயத் தகுதித் தேர்வாகும். அதுமட்டுமல்லாமல் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 2025-ம் ஆண்டு உத்தரவிட்டது. குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் அனைத்து ஆசிரியர்களும் தகுதி பெற வேண்டும். அப்படி தகுதி பெற விரும்பாதவர்கள் அவர்களுக்கான சலுகைகளுடன் ஓய்வு பெற்று கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஓய்வுப்பெற 5 ஆண்டுகள் வரை கால அவகாசம் கொண்டவர்களுக்கு மட்டும் இந்த உத்தரவில் இருந்து தளர்வு வழங்கப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
தமிழ்நாடு அரசாணை வெளியிடு
Image Credit : our own

தமிழ்நாடு அரசாணை வெளியிடு

இந்த உத்தரவினால் தமிழ்நாட்டில் அரசு பள்ளியில் பணிபுரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியை இழக்கும் சூழல் உருவானது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்த தமிழ்நாடு அரசாணை வெளியிட்டது. அதன்படி, கடந்த பிப்ரவரி 13-ம் தேதி அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இதற்கான தேர்வு இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது.

Related Articles

Related image1
Aadhav Arjuna Vs DMK: ஸ்டாலின் குடும்பத்துக்கு இதுவே கடைசி.. கரூர் சம்பவத்தில் ஒருத்தரையும் விடமாட்டேன்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
Related image2
Ration Card Update: ரேஷன் கார்டுதாரர்களே உஷார்! ஜூலை 5-க்குள் 'இதை' செய்யாட்டி ரேஷன் பொருள் கட்?
35
ஆசிரியர் தேர்வு வாரியம்
Image Credit : Asianet News

ஆசிரியர் தேர்வு வாரியம்

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.01/2026 நாள் 13.02.2026-இன்படி, பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I இன்றும், தாள்-II நாளையும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. தாள்-I-க்கு 222 மையங்களில் 61,386 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதில் ஆண் தேர்வர்கள் 12,001, பெண் தேர்வர்கள் 49,385 ஆகும். இதில் 1,321 தேர்வர்கள் மாற்றுத்திறன் கொண்டவர்கள். இம்மாற்றுத்திறனாளிகளில் 126 மாற்றுத் திறனாளிகளுக்கு சொல்வதை எழுதுபவர் (Scribe) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

45
கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்
Image Credit : ANI

கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்

தாள்-II-க்கு 613 மையங்களில் 1,67,743 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இதில் ஆண் தேர்வர்கள் 40,535 பெண் தேர்வர்கள் 1,27,208 ஆகும். இதில் 3,151 தேர்வர்கள் மாற்றுத்திறன் கொண்டவர்கள். இம்மாற்றுத்திறனாளிகளில் 601 மாற்றுத் திறனாளிகளுக்கு சொல்வதை எழுதுபவர் (Scribe) நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இத்தேர்வுகளைக் கண்காணிக்க அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த இயக்குநர் இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் நிலையில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நாளன்று தேர்வர்கள் சார்ந்த தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் வருகை புரிய வேண்டும். காலை 9.30 மணிக்குப் பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

55
எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தடை
Image Credit : ANI

எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தடை

குறிப்பாக தேர்வு எழுத வருபவர்கள் தேர்வு அறைக்குள் பெல்ட், ஷூ, ஹை ஹீல்ஸ், டிஜிட்டல் வாட்ச் அணியவும், செல்போன், மைக்ரோபோன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தேர்வு
ஆசிரியர்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!
Recommended image2
Now Playing
மக்கள் தவிப்பது உங்களுக்கு வேடிக்கையா?" - தமிழக அரசின் நிர்வாக சீர்கேடுகளைப் பட்டியலிட்ட அன்புமணி !
Recommended image3
Now Playing
மிக கீழ்த்தரமாக , கேவலமாக பேசும் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..! ஆர்.எஸ்.பாரதி கொடுத்த பதிலடி!
Related Stories
Recommended image1
Aadhav Arjuna Vs DMK: ஸ்டாலின் குடும்பத்துக்கு இதுவே கடைசி.. கரூர் சம்பவத்தில் ஒருத்தரையும் விடமாட்டேன்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!
Recommended image2
Ration Card Update: ரேஷன் கார்டுதாரர்களே உஷார்! ஜூலை 5-க்குள் 'இதை' செய்யாட்டி ரேஷன் பொருள் கட்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved