MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TVK Vs DMK: கொத்தடிமையாய் வாழும் உங்களுக்கு.. ஆர்.எஸ்.பாரதியின் சாதி அரசியலை வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!

TVK Vs DMK: கொத்தடிமையாய் வாழும் உங்களுக்கு.. ஆர்.எஸ்.பாரதியின் சாதி அரசியலை வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!

திமுகவின் ஆர்.எஸ்.பாரதிக்கு பேச்சுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார். ஒரு குடும்ப ஆதிக்கத்திற்கு கொத்தடிமையாக இருக்கும் அவருக்கு பதிலளிக்க என்ன தகுதி இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 04 2026, 11:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ஆர்.எஸ்.பாரதிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்
Image Credit : our own

ஆர்.எஸ்.பாரதிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர்

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது தவெக மற்றும் ஆதவ் அர்ஜூனா கடுமையாக விமர்சித்திருந்தார். அதாவது ஆதவ் அர்ஜூனாவுடைய ஆட்டத்துக்கு ஒரு எல்லையே இல்லாமல் போய் கொண்டுள்ளது. அவர் யார் என்பது நாட்டுக்கு தெரியும். இந்த நாட்டையே திவாலாக்கும் லாட்டரி குடும்பத்தை சார்ந்தவர். இவருடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் மீது கேரளாவில் 928 கோடிக்கு லாட்டரி சீட்டு ஊழல் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இவருடைய மனைவி இந்த வழக்கில் ஒரு அக்யூஸ்ட். மேலும் பாப்பானுக்கு பதில் சொல்லமாட்டேன் என கூறியிருந்தார். இதற்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
பதில் சொல்ல திராணி இருக்கிறதா?
Image Credit : Asianet News

பதில் சொல்ல திராணி இருக்கிறதா?

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: பாப்பானுக்கு பதில் சொல்ல மாட்டேன் என சொல்பவருக்கு முதலில் எனக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா? சாதாரண குடும்பத்தில் பிறந்து, தளபதி மக்கள் இயக்கத்தில் சேவைகள் செய்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களான தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும், காமராஜரையும், வேலு நாச்சியாரையும் மற்றும் அஞ்சலை அம்மாளையும் மனதில் ஏற்று அவர்களது கொள்கைகளை பின்பற்றி நடப்பவன் நான்.

Related Articles

Related image1
Gold Loan Waiver: நகை கடன் தள்ளுபடி?! வங்கிகளுக்கு வந்த புதிய உத்தரவு என்ன? யாருக்கெல்லாம் கிடைக்கலாம்?
Related image2
TRB: சிறப்பு டெட் தேர்வு! காலை 9.30 தாண்டினால் நோ என்ட்ரி! பெல்ட், ஷூ-வுக்கு தடை... டிஆர்பி வெளியிட்டுள்ள முக்கிய கட்டுப்பாடுகள்!
34
வாக்கு அரசியலுக்கா சாதி
Image Credit : our own

வாக்கு அரசியலுக்கா சாதி

உங்களை போல தந்தை பெரியாரை வழிகாட்டி என்று சொல்லிக்கொண்டு, சமூக நீதி என பொய் வேடம் போட்டு மக்களை ஏமாற்றி ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ, அடித்தட்டு மக்களுக்கோ அல்லது வாக்கு அரசியலுக்கோ சாதியை வைத்து பிழைக்கும் பழக்கம் எனக்கில்லை. எங்கள் மாண்புமிகு முதல்வர் இன்று சாதி மதத்தை உடைத்து உண்மையான சமூக நீதிப் பாதையில் ஆட்சியை அமைத்து மக்கள் பணி செய்கிறார். அவரது வழியை பின்பற்றி நாங்களும் நடக்கிறோம்.

44
 பதில் சொல்ல என்ன தகுதி இருக்கிறது
Image Credit : Asianet News

பதில் சொல்ல என்ன தகுதி இருக்கிறது

சாதியை வைத்து நீங்கள் நடத்தும் போலி அரசியல் பிழைப்புக்கு தான் தந்தை பெரியாரின் தடி மூலம் தேர்தலில் தோல்வி அடி விழுந்திருக்கிறது என்பதை நினைவுபடுத்தி பேசுவது நல்லது. கொள்கைப் பிடிப்போடு, கொள்கைத் தலைவர்களை மனதில் ஏற்று, கடினமாக உழைத்து அதிகாரத்துக்கு வந்த எங்களுக்கு எதிராக, ஒரு குடும்ப ஆதிக்கத்துக்கு கொத்தடிமைகளாக வாழும் உங்களுக்கு முதலில் பதில் சொல்ல என்ன தகுதி இருக்கிறது என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
TRB: சிறப்பு டெட் தேர்வு! காலை 9.30 தாண்டினால் நோ என்ட்ரி! பெல்ட், ஷூ-வுக்கு தடை... டிஆர்பி வெளியிட்டுள்ள முக்கிய கட்டுப்பாடுகள்!
Recommended image2
Vijay Govt: நிலம் வாங்கப் போறவங்களுக்கு ஜாக்பாட்! இனி பட்டா தேடி வரும்! தமிழக அரசு குட்நியூஸ்!
Recommended image3
Now Playing
மக்கள் தவிப்பது உங்களுக்கு வேடிக்கையா?" - தமிழக அரசின் நிர்வாக சீர்கேடுகளைப் பட்டியலிட்ட அன்புமணி !
Related Stories
Recommended image1
Gold Loan Waiver: நகை கடன் தள்ளுபடி?! வங்கிகளுக்கு வந்த புதிய உத்தரவு என்ன? யாருக்கெல்லாம் கிடைக்கலாம்?
Recommended image2
TRB: சிறப்பு டெட் தேர்வு! காலை 9.30 தாண்டினால் நோ என்ட்ரி! பெல்ட், ஷூ-வுக்கு தடை... டிஆர்பி வெளியிட்டுள்ள முக்கிய கட்டுப்பாடுகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved