அதிகாலையிலேயே முதல்வர்க்கு அதிர்ச்சி! கண்ணீரில் ஸ்டாலின் குடும்பம்!
MK Stalin தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சம்மந்தி வேதமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார். அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

MK Stalin
தமிழக முதல்வராகவும், திமுக தலைவராகவும் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். இவரது மனைவி துர்கா ஸ்டாலின். ஸ்டாலின்-துர்கா தம்பதியின் மகன் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகவும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.
Sabareesan
அதேபோல் ஸ்டாலின்-துர்கா தம்பதியின் மகள் பெயர் செந்தாமரை. இவரது கணவர் சபரீசன். இவர் தற்போதைய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு உறவினர் ஆவார். ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்தபோது முதலில் பழனிவேல் தியாகராஜனுக்கு நிதி அமைச்சர் பதவி கிடைத்ததற்கு சபரீசனின் செல்வாக்குதான் காரணம் என்று கூறப்பட்டு வந்தது. ஸ்டாலின் மகள் செந்தாமரை தனது கணவர் சபரீசனுடன் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
Sabareesan father passes away
இந்நிலையில் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி (80) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஒஎம்ஆரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நள்ளிரவில் காலமானார். வேதமூர்த்தியின் உடல் கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ளது. வேதமூர்த்தி நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகபுரம் இவரது சொந்த ஊர். வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வேதமூர்த்தி முதல்வர் ஸ்டாலினின் சம்மந்தி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தை கேள்வி பட்டதுமே அவரது மறைவுக்கு திமுக பிரமுகர் இரங்கல் தெரிவித்து நேரில் அஞ்சலி செலுத்த குவிந்து வருகின்றனர்.
CM Stalin nephew Sabareesan
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய மாமனார் ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் வியூகங்களை திரைமறைவில் சபரீசன் வகுத்து கொடுத்து வருகிறார். கருணாநிதியின் மறைவுக்குப் பின் ஸ்டாலின் தலைமையில் திமுக எதிர்கொண்ட 2019, 2021, 2024 ஆகிய மூன்று தேர்தல்களிலுமே கட்சியின் வியூக வகுப்பில் முக்கியமான பங்காற்றினார் சபரீசன். திமுகவின் முக்கியமான அதிகார மையங்களில் ஒருவர் சபரீசன் என்றாலும், இதுவரை பொதுவெளியில் அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. பின் இருக்கையில் அமர்ந்தபடியே கட்சிப் பணிகளில் ஈடுபடுகிறார். கருணாநிதிக்கு மாறன் செயல்பட்டதுபோல, ஸ்டாலினுக்கு சபரீசன் செயல்படுகிறார். அண்மையில் முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் மு.க. முத்து உடல்நலக்குறைவால் மரணமடைந்த நிலையில் மீண்டும் அவரது வீட்டில் சோகம் நிகழ்ந்திருக்கிறது.