MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு குட்நியூஸ்? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்!

1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு குட்நியூஸ்? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்!

TN School Student Annual Exam: வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்த பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Mar 29 2025, 08:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஆண்டு இறுதித் தேர்வு

ஆண்டு இறுதித் தேர்வு

அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அண்மையில் வெளியிட்டது. அதன்படி, 1ம் வகுப்பு 5ம் வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு ஏப்ரல் 9ம் தேதி முதல் 21ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. 

25
தேர்வு அட்டவணை

தேர்வு அட்டவணை

அதேபோல் 6, 7, 8, 9ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 8ம் தொடங்கி  24ம் தேதி வரையில் நடத்தப்படுகிறது. அதாவது ஏப்ரல் 8ம் தேதி தமிழ்ப்பாடத் தேர்வு, 9ம் தேதி ஆங்கிலம், 16ம் தேதி கணக்கு, 17ம் தேி விருப்ப மொழி, 21ம் தேதி அறிவியல், 22ம் தேதி விளையாட்டு, 23ம் தேதி 6, 7ம் வகுப்புகளுக்கு மட்டும் சமூக அறிவியல், 24ம் தேதி 8, 9ம் வகுப்புக்கு சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடக்கின்றன. 

இதையும் படிங்க: 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய செய்தி! கூடுதலாக ஒரு மணி நேரம்! அன்பில் மகேஷ் தகவல்!

35
பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள்

மேற்கண்ட தேர்வுகளில் 1, 2, 3,ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் காலை 10 மணி முதல் 12 மணி வரையும், 4, 5ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும் நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாக 6, 7ம் வகுப்புகளுக்கான அனைத்து பாடங்களும் காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், 8, 9ம் வகுப்புகளுக்கு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் சமூக அறிவியல் தேர்வு மட்டும் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. 

45
சுட்டெரிக்கும் வெயில்

சுட்டெரிக்கும் வெயில்

இந்நிலையில், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கே அஞ்சுகின்றனர். இதனால்  1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 

இதையும் படிங்க:  வீட்ல வேலை இருந்தா சீக்கிரமாக முடிச்சுடுங்க! சென்னை மட்டுமல்ல தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

55
மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு

மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் வெயில் அதிகமாக உள்ள காரணத்தால், ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்த பரிசீலனை செய்யப்படும். மாவட்ட கல்வி அலுவலர்களுடன் இதுதொடர்பாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தேர்வு
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பள்ளி மாணவர்
கோடைக்காலம்
வெப்ப அலை
பள்ளிக் கல்வித் துறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மானமுள்ள திமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள்.! கொங்கு மண்டலம் எங்களுக்குத்தான்! விளாசிய அண்ணாமலை
Recommended image2
Now Playing
வரும் தேர்தலில் திமுக போட்டியிடும் முறை தவறாக இருக்கிறது ! அண்ணாமலை குற்றச்சாட்டு
Recommended image3
CM Net Worth: தமிழகம், புதுவை, கேரளா, 5 மாநில முதல்வர்களில் யார் ரிச்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved