MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய செய்தி! கூடுதலாக ஒரு மணி நேரம்! அன்பில் மகேஷ் தகவல்!

10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய செய்தி! கூடுதலாக ஒரு மணி நேரம்! அன்பில் மகேஷ் தகவல்!

TN 10th Public Exam: 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் முதல் ஏப்ரல் 15 வரை நடைபெறவுள்ளது. 9 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் 4113 தேர்வு மையங்களில் தேர்வெழுதவுள்ளனர்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Mar 28 2025, 08:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு

2024-25-ஆம் கல்வியாண்டிற்கான மார்ச் முதல் ஏப்ரல் வரை 2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்பொதுத்தேர்விற்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 22 முதல் 28 வரை  நடைபெற்று முடிந்துள்ளது. பொதுத்தேர்வுகளை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மாவட்டத்திற்கு சென்று, தேர்விற்கு முந்தைய ஏற்பாடுகள் அனைத்தையும் பார்வையிட்டு உறுதி செய்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முன்னேற்பாடுகள்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முன்னேற்பாடுகள்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்டத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தி அக்கூட்டத்தில், தடையில்லா மின்சாரம் வழங்கிட மின்சாரத்துறைக்கும், தேர்வுப்பணிகளுக்கு பாதுகாப்பு வழங்கிட காவல்துறைக்கும் தேர்வுமையங்களில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் முன்னேற்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

37
அறிவுரைக் கூட்டம்

அறிவுரைக் கூட்டம்

மாவட்டங்களில் தேர்வுப்பணிகளில் ஈடுபடும் அனைத்து நிலை அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு அறிவுரைக் கூட்டம் நடத்தப்பட்டு அறிவுரை கையேடுகளும் வழங்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 12,487 பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் 4,46,471 மற்றும் மாணவிகள் 4,40,499 என மொத்தம் 8,86,970 தேர்வர்களும், தனித்தேர்வர்கள் 25,841 மற்றும் சிறைவாசித் தேர்வர்கள் 273 என மொத்தம் 9,13,084 தேர்வர்கள் 4113 தேர்வுமையங்களில் தேர்வெழுதவுள்ளனர்.

இதையும் படிங்க: பள்ளி சீருடை அளவெடுத்த ஆண் டெய்லர்! கட்டாயப்படுத்திய ஆசிரியை! மாணவி பரபரப்பு புகார்! நடந்தது என்ன?

47
தேர்வெழுத கூடுதல் ஒரு மணி நேரம்

தேர்வெழுத கூடுதல் ஒரு மணி நேரம்

இத்தேர்வுப் பணியில் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் சுமார் 48,500- க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 4800-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதும் 15,729 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு மொழிப்பாட விலக்கு, சொல்வதை எழுதுபவர், தேர்வெழுத கூடுதல் ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: ஏப்ரல் மாதத்தில் கொத்து கொத்தாக விடுமுறை! சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் பள்ளி மாணவர்கள்!

57
முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை

முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை

9498383075 / 9498383076 ஆகிய தேர்வுக் கட்டுப்பாட்டு தொடர்பு எண்களை தொடர்பு கொண்டு மாணவர்கள்/தேர்வர்கள்/பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் ஐயங்களை தெரிவித்து பயன்பெறலாம். இதற்கென அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படும்.

இதையும் படிங்க: நாளை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்! மாணவர்கள் என்னவெல்லாம் செய்யக்கூடாது?

67
செல்போனுக்கு தடை

செல்போனுக்கு தடை

தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசியை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் தங்களுடன் அலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ அலைபேசி/இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

77
ஒழுங்கீனச் செயல்பாடுகள்

ஒழுங்கீனச் செயல்பாடுகள்

தேர்வு நேரங்களில் தேர்வர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் குற்றங்களுக்கு தக்கவாறு தண்டனைகள் வழங்கப்படும். மேலும் ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ / ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயலுமேயானால் பள்ளித் தேர்வு மையத்தினை இரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தினை இரத்து செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  தெரிவித்தார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தேர்வு
பள்ளிக் கல்வித் துறை
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பள்ளி மாணவர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ஓட்டு போட்ட நீங்கள் தான் ஆட்சி ஒழுங்காக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்! கமல்ஹாசன் அதிரடி
Recommended image2
Now Playing
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Recommended image3
TN Rain Update: வெயிலுக்கு குட்பை! தமிழகத்தில் ருத்ரதாண்டவம் ஆடப்போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved