- Home
- Tamil Nadu News
- வீட்ல வேலை இருந்தா சீக்கிரமாக முடிச்சுடுங்க! சென்னை மட்டுமல்ல தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!
வீட்ல வேலை இருந்தா சீக்கிரமாக முடிச்சுடுங்க! சென்னை மட்டுமல்ல தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!
Tamilnadu Power Cut: தமிழகம் முழுவதும் பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும்.

தமிழ்நாடு மின்சார வாரியம்
தமிழகம் முழுவதும் மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை ஏற்படும் நேரத்தில் ஊழியர்கள் பழுதுகளை சரி செய்வது மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் ஊழியர்கள் மேற்கொள்வது வழக்கம்.
மின்தடை இடங்கள்
இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். ஆனால், மார்ச் மாதம் 3ம் தேதி முதல் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு காரணமான தமிழகத்தில் மின்தடை செய்யப்படுவது முழுவதுமாக தவிர்க்கப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு ஹைகோர்ட் செக்! அமைச்சர் கோரிக்கை நிராகரிப்பு!
பொதுத்தேர்வு
அப்படி இருந்த போதிலும் தவிர்க்க முடியாத காரணத்தால் ஒரு சில பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டது. இந்நிலையில் நாளை தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதை விரிவாக பார்ப்போம்.
இதையும் படிங்க: 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய செய்தி! கூடுதலாக ஒரு மணி நேரம்! அன்பில் மகேஷ் தகவல்!
சென்னையில் மின்தடை
எண்ணூர்:
கத்திவாக்கம்,எண்ணார் பஜார், காட்டு. குப்பம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர், சிவன்படை வீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்.வி.எம். நகர், வி.ஓ.சி. நகர், உலகநாதபுரம், முகத்துவார குப்பம், எண்ணூர் குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், சின்னக்குப்பம், பெரியகுப்பம், எர்ணாவூர் குப்பம், இ.டி.பி.எஸ். வாரிய குடியிருப்பு, எர்ணாவூர், ஜோதி நகர், ராமநாதபுரம், சக்தி கணபதி நகர், சண்முகபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.