- Home
- Sports
- Sports Cricket
- IND vs ENG Test: இந்தியா தோல்விக்கான '3' காரணங்கள் இதுதான்! 4வது டெஸ்ட்டில் என்ன மாற்றம் வேண்டும்?
IND vs ENG Test: இந்தியா தோல்விக்கான '3' காரணங்கள் இதுதான்! 4வது டெஸ்ட்டில் என்ன மாற்றம் வேண்டும்?
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்? 4வது டெஸ்ட்டில் இந்திய அணி என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.

What Is The Reasons For India's Defeat In The 3rd Test Against England
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஜடேஜாவின் (61 ரன்கள்) போராட்டம், அவருக்கு பும்ரா, சிராஜ் பேட்டிங் ஒத்துழைப்பு இருந்தபோதிலும் கடைசியில் இந்தியாவால் வெற்றிக் கனியை பறிக்க முடியவில்லை.
இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி இந்த தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இரு அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் 23ம் தேதி தொடங்குகிறது. 3வது டெஸ்ட்டில் இந்திய அணியின் தோல்விக்கு காரணங்கள் என்னென்ன? 4வது டெஸ்ட்டில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்து பார்ப்போம்.
கருண் நாயரின் மோசமான பேட்டிங்
3வது டெஸ்ட்டில் இந்திய அணியின் தோல்விக்கு 2வது இன்னிங்சில் ஒட்டுமொத்த பேட்டிங் யூனிட்டும் சொதப்பியதே முக்கிய காரணம். இதில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தவர் கருண் நாயர். முதல் இன்னிங்சில் 40 ரன்கள் அடித்த கருண் நாயர். 2வது இன்னிங்சில் 14 ரன்னில் அவுட் ஆனார்.
அதுவும் 2வது இன்னிங்சில் அவர் பந்தை அடிக்காமல் விட்டு எல்பிடபிள்யூ ஆன விதம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விராட் கோலியின் இடத்தில் களமிறங்கும் கருண் நாயர் இந்த தொடர் முழுவதும் சொதப்பி வருகிறார். முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆன இவர் 2வது இன்னிங்சில் 20 ரன்னில் அவுட் ஆனார்.
கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்சன் வேண்டும்
2வது டெஸ்ட்டிலும் 31 மற்றும் 21, 3வது டெஸ்ட்டில் 40 மற்றும் 14 என சொதப்பலான பேட்டிங் ஆடியுள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய காரணத்தால் கருண் நாயருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் கிடைத்த வாய்ப்புகளை வீணடித்து விட்டார். இவரது மோசமான பார்ம் இந்திய அணியையும் பாதிக்கிறது. அதே வேளையில் முதல் டெஸ்ட்டில் அறிமுகமாகி சரியாக விளையாடாத முதல் இன்னிங்சில் 0, 2வது இன்னிங்சில் 30) தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் நீக்கப்பட்டார்.
அவருக்கு கடந்த இரண்டு டெஸ்ட்டிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் முதல் டெஸ்ட்டில் சொதப்பிய கருண் நாயருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கிய போதிலும் அவர் சொதப்பி வருகிறார். ஆகவே 4வது டெஸ்ட்டில் கருண் நாயரை நீக்கி விட்டு அவரது இடத்தில் சாய் சுதர்சனை சேர்த்தால் இந்திய அணியின் பேட்டிங் பலமடையும்.
ஜெய்ஸ்வாலின் தவறான ஷாட்
இந்திய அணியின் தோல்விக்கு காரணம் ஜெய்ஸ்வால். முதல் டெஸ்ட்டில் ஒரு சதம், 2வது டெஸ்ட்டில் அரை சதம் அடித்த ஜெய்ஸ்வால் 3வது டெஸ்ட்டின் முக்கியமான கட்டத்தில் ரன் அடிக்கவில்லை. முதல் இன்னிங்சில் 13 ரன்னும், 2வது இன்னிங்சில் டக் அவுட்டும் ஆனார்.
அதிலும் 2வது இன்னிங்சில் ஆர்ச்சரில் பவுன்ஸில் ஷாட் அடித்து அவர் அவுட் ஆன விதம் கடும் விமர்சனத்துக்குள்ளானது. ஆகவே அடுத்த டெஸ்ட்டில் ஜெய்ஸ்வாலை உட்கார வைத்து விட்டு இந்திய அணிக்காக வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட் மற்றும் காயம்
இது தவிர 3வது டெஸ்ட்டில் இந்திய அணியின் தோல்விக்கு ரிஷப் பண்ட் ரன் அவுட்டும் ஒரு காரணமாகும். முதல் இன்னிங்சில் இந்தியா 248/3 என நல்ல நிலையில் இருந்தபோது ரிஷப் பண்ட் கே.எல்.ராகுல் சதம் அடிப்பதற்காக ஒரு ரன் ஓடி தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். இது ஆட்டத்தின் திருப்பு முனையாகி அடுத்து இந்தியா 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆகாமல் இருந்தால் இந்தியா முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்று எளிதாக இந்த போட்டியை வென்றிருக்கலாம்.
இதேபோல் ரிஷப் பண்ட்டின் காயமும் தோல்விக்கு ஒரு காரணமாகி விட்டது. விக்கெட் கீப்பிங் செய்யும்போது விரலில் காயம் அடைந்த அவர் முதல் இன்னிங்சில் காயத்துடன் 74 ரன்கள் அடித்தார். ஆனால் 3வது இன்னிங்சில் அவரால் சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை. இதனால் எளிதாக தனது விக்கெட்டை ஆர்ச்சருக்கு தாரை வார்த்தார்.
4வது டெஸ்ட்டில் என்னென்ன மாற்றம் வேண்டும்?
இந்திய அணி மான்செஸ்டரில் 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. நாம் மேலே சொன்னபடி இந்த போட்டியில் கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்சன் இடம்பெற வேண்டும். பும்ரா விளையாடாவிட்டால் அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்குக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
ஜெய்ஸ்வாலை உட்கார வைத்து விட்டு அபிமன்யூ ஈஸ்வரனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். மற்றபடி 3வது டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடிய நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அணியில் தொடர வேண்டும்.