- Home
- Sports
- Sports Cricket
- WI vs IND: தம்பி நீங்க கிளம்புங்க.. 2வது ODI-க்கான இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்..! இளம் வீரர் அறிமுகம்
WI vs IND: தம்பி நீங்க கிளம்புங்க.. 2வது ODI-க்கான இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம்..! இளம் வீரர் அறிமுகம்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
2வது ஒருநாள் போட்டி இன்று டிரினிடாட்டில் குயின்ஸ் பார்க் ஓவலில் நடக்கிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணியும், இந்த போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் களமிறங்குகின்றன.
இதையும் படிங்க - என்னை பொறுத்தமட்டில் அவன் ஆல்ரவுண்டரே கிடையாது..! இந்திய வீரரை துச்சமாக மதிப்பிட்ட ஸ்காட் ஸ்டைரிஸ்
இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம். இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஃபாஸ்ட் பவுலர் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக இளம் இடது கை ஃபாஸ்ட் பவுலர் அர்ஷ்தீப் சிங் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. அர்ஷ்தீப் சிங் இந்த போட்டியில் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாக வாய்ப்புள்ளது.
அந்த ஒரு மாற்றத்தைத் தவிர வேறு மாற்றம் எதுவும் செய்யப்பட வாய்ப்பில்லை. சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா ஆகியோர் முதல் போட்டியில் சோபிக்கவில்லை. எனினும் சாம்சன் விக்கெட் கீப்பிங்கிலும், ஹூடா கடந்த போட்டிகளிலும் நன்றாக செயல்பட்டதால், அவர்களுக்கு தொடர் வாய்ப்பளிக்கப்படும்.
ஷர்துல் தாகூரும் பேட்டிங், பவுலிங் இரண்டிலும் பங்களிப்பு செய்யக்கூடியவர் என்பதால், பாண்டியா இல்லாததால் ஷர்துல் தாகூரும் தொடர்ந்து வாய்ப்பு பெறுவார்.
இதையும் படிங்க - அடுத்த ஆண்டு ஹர்திக் பாண்டியா ஓய்வு..? பாண்டியாவின் திட்டத்தை அம்பலப்படுத்திய ரவி சாஸ்திரி
உத்தேச இந்திய அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.