- Home
- Sports
- Sports Cricket
- IND vs IRE 2nd T20: வேஸ்ட் லக்கேஜ்! இந்திய அணியில் 3 ஸ்டார் வீரர்கள் நீக்கம்! பிளேயிங் லெவன்!
IND vs IRE 2nd T20: வேஸ்ட் லக்கேஜ்! இந்திய அணியில் 3 ஸ்டார் வீரர்கள் நீக்கம்! பிளேயிங் லெவன்!
IND vs IRE 2nd T20: அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படுகின்றன. முதல் போட்டியில் சொதப்பிய 3 ஸ்டார் வீரர்கள் நீக்கப்படுகின்றனர். இந்திய பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம்.

இந்தியா, அயர்லாந்து டி20 தொடர்
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இது மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் அயர்லாந்திடம் இந்திய அணி தோற்பது இதுவே முதன் முறையாகும். இந்திய அணியில் அபிஷேக் சர்மா (49) மட்டுமே சிறப்பாக விளையாடினார். முன்னணி வீரர்கள் சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், ஷிவம் துபே ஏமாற்றினார்கள். இதே போல் பவுலிங்கிலும் சொதப்பிய இந்தியா பீல்டிங்கிலும் படுமோசமாக செயல்பட்டது.
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம்
இந்த நிலையில், அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி போட்டி நாளை (ஜூன் 28) ஞாயிற்றுக்கிழமை பெல்ஃபாஸ்டில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும். தோற்றால் முதன்முறையாக இந்தியாவுக்கு எதிராக தொடரை வென்று அயர்லாந்து அணி வரலாற்று சாதனை படைக்கும். முதல் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்ததால் அணியின் பிளேயிங் லெவனில் ஏராளமான மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வைவவ் சூர்யவன்ஷி இடம்பெறுவாரா?
முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் ஏமாற்றினாலும் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. ஒருவேளை சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டால் அதற்கு பதிலாக வைபவ் சூர்யவன்ஷி இடம்பெறலாம். ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தவிர சஞ்சுவை ஓப்பனிங்கில் இருந்து நீக்கிவிட்டு வைபவிற்கு வாய்ப்பு கொடுத்தால், டாப் 3 பேட்ஸ்மேன்களும் இடது கை வீரர்களாகி விடுவார்கள். திலக் வர்மா, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் இடது கை வீரர்கள் என்பதால், வலது கை பேட்ஸ்மேனான சஞ்சுவை நீக்க மாட்டார்கள் என கருதப்படுகிறது.
ஷிவம் துபேவுக்கு இடமில்லை
மூன்றாவது இடத்தில் களமிறங்கி முதல் போட்டியில் 1 ரன்னில் அவுட்டாகி இஷான் கிஷன் ஏமாற்றினார். அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் அவர் சிறப்பாக ஆடவில்லை என்றால், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அணியில் இருந்து நீக்கப்படலாம். மிடில் ஆர்டரில் ஃபினிஷராக இறங்கி சொதப்பிய ஷிவம் துபே, நாளைய போட்டியில் நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அவருக்குப் பதிலாக, மும்பையின் இளம் ஆல்-ரவுண்டர் சூர்யான்ஷ் ஷெட்ஜ் இந்திய அணியில் இடம்பிடிக்கலாம். ஷெட்ஜ் ஒரு நல்ல மீடியம் பேஸ் பவுலராகவும் பயன்படுவார்.
வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா இடமும் காலி
முதல் போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் வாஷிங்டன் சுந்தர் ஏமாற்றினார். முதல் போட்டியில் சுந்தர் 12 பந்துகளில் 9 ரன்கள் எடுத்ததுடன், ஒரு ஓவரில் 19 ரன்களையும் வாரி வழங்கினார். அவருக்குப் பதிலாக ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னரான ரவி பிஷ்னோய்க்கு இந்தியா வாய்ப்பு வழங்கலாம். முதல் போட்டியில் நான்கு ஓவர்களில் 57 ரன்கள் கொடுத்து ஏமாற்றிய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கும் இரண்டாவது போட்டியில் இடம் இருக்காது எனத் தெரிகிறது.
இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்
பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக, ஐபிஎல்-லில் கலக்கிய பிரின்ஸ் யாதவ் நாளை அறிமுக வீரராகக் களமிறங்கலாம். அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, வைபவ் சூர்யவன்ஷி அல்லது சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யான்ஷ் ஷெட்ஜ், அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங்.

