- Home
- Sports
- Sports Cricket
- NZ vs ENG:டெஸ்ட் போட்டியில் டி20யை போல் அடித்து ஆடி ஹாரி ப்ரூக் அதிரடி சதம்; ஜோ ரூட்டும் சதம்! நியூசி., அலறல்
NZ vs ENG:டெஸ்ட் போட்டியில் டி20யை போல் அடித்து ஆடி ஹாரி ப்ரூக் அதிரடி சதம்; ஜோ ரூட்டும் சதம்! நியூசி., அலறல்
நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் அதிரடியாக ஆடி ஹாரி ப்ரூக் சதமடிக்க, ஜோ ரூட்டும் சதமடித்தார். இவர்கள் இருவரது சதத்தால் முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் அடித்துள்ளது.

இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட்டில் 267 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. வெலிங்டனில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணி:
ஜாக் க்ராவ்லி, பென் ட்க்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), ஆலி ராபின்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
நியூசிலாந்து அணி:
டாம் லேதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், வில் யங், ஹென்ரி நிகோல்ஸ், டேரைல் மிட்செல், டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல், டிம் சௌதி (கேப்டன்), மேட் ஹென்ரி, நீல் வாக்னர்.
முதலில் பேட்டிங் ஆடிவரும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் க்ராவ்லி(2) மற்றும் பென் டக்கெட் (9) ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். ஆலி போப்பும் 10 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 21 ரன்களுக்கே இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ஹாரி ப்ரூக்கும் ஜோ ரூட்டும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி இருவருமே சதமடித்தனர்.
ஹாரி ப்ருக் டெஸ்ட் போட்டியை போல் ஆடாமல் டி20 கிரிக்கெட்டில் ஆடுவதை போல் அடித்து ஆடி சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக் அடித்து ஆடுவதை போல் ஆடினார் ஹாரி ப்ரூக். அதுவும் சிறிய இன்னிங்ஸ் இல்லை; பெரிய இன்னிங்ஸ். முதல் நாள் ஆட்ட முடிவில் ஹாரி ப்ரூக் 169 பந்தில் 24 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 184 ரன்களை குவித்து களத்தில் உள்ளார்.
ஒரு கேப்டன் இப்படி தொந்தியும் தொப்பையுமா இருக்கலாமா..? அசிங்கமா இல்ல..? ரோஹித்தை விளாசிய கபில் தேவ்
அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய ஜோ ரூட்டும் சதமடித்த நிலையில், முதல் நாள் முடிவில் ரூட் 101 ரன்களுடன் களத்தில் உள்ளார். முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்களை குவித்துள்ளது.