MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs AUS: அம்மாவுக்கு உடம்பு சரியில்ல; 3வது டெஸ்ட்டிலிருந்து கம்மின்ஸ் விலகல்! மீண்டும் கேப்டன் ஆனார் ஸ்மித்

IND vs AUS: அம்மாவுக்கு உடம்பு சரியில்ல; 3வது டெஸ்ட்டிலிருந்து கம்மின்ஸ் விலகல்! மீண்டும் கேப்டன் ஆனார் ஸ்மித்

இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியிலிருந்து ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகியதால், 3வது டெஸ்ட் போட்டிக்கான கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். 

1 Min read
Author : karthikeyan V
Published : Feb 24 2023, 02:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று 2-0 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலிலும் 2வது இடத்தை வலுவாக தக்கவைத்துள்ளது இந்திய அணி. 3வது டெஸ்ட்டிலும் வெற்றி பெற்றால் முதலிடத்திற்கு முன்னேறிவிடும்.
 

24

முதலிரண்டு போட்டிகளில் தோற்ற ஆஸ்திரேலிய அணி, டெஸ்ட் தொடரை ஜெயிக்கும் வாய்ப்பை இழந்துவிட்டது. தோற்றுவிடாமல் இருக்க போராடும். ஆனால் அதற்கான வாய்ப்புகளும் குறைவுதான். அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து விலகுகின்றனர். ஏற்கனவே ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக விலகிய நிலையில், 3வது டெஸ்ட்டிலிருந்து பாட் கம்மின்ஸ் விலகியுள்ளார்.

ஒரு கேப்டன் இப்படி தொந்தியும் தொப்பையுமா இருக்கலாமா..? அசிங்கமா இல்ல..? ரோஹித்தை விளாசிய கபில் தேவ்

34

2வது டெஸ்ட் போட்டி முடிந்ததும், ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் குடும்ப விவகாரம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு திரும்பினார். அவர் 3வது டெஸ்ட்டுக்கு முன் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது தாய்க்கு உடம்பு சரியில்லை என்பதால் அவர் இந்தியாவிற்கு திரும்புவதில்லை என்று முடிவு எடுத்துள்ளார். அவர் தாய்க்கு உடம்பு சரியில்லாததால் தான் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவிற்கு சென்றார். அவரது உடல்நிலையில் இன்னும் முன்னேற்றம் இல்லாததால் கம்மின்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளார்.

IPL 2023: டெல்லி கேபிடள்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு கேப்டன்கள் நியமனம்! 2 பேருமே வெளிநாட்டு கேப்டன்கள்

44

இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். 2014லிருந்து 2018 வரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தியுள்ள ஸ்டீவ் ஸ்மித், 2018 தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை பெற்றார். அதன்பின்னர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட வாய்ப்பு அவருக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்படும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
 

About the Author

KV
karthikeyan V
ஸ்டீவ் ஸ்மித்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்தியாவின் புதிய நம்பிக்கைக்கு டாடா நிறுவனம் பரிசாக கொடுத்த கார் எது தெரியுமா.?
Recommended image2
WI vs SA T20 World Cup 2026: Wi, SA போட்டியில் கவனம் செலுத்தும் இந்தியர்கள்..! சாதிக்கப்போவது யார்?
Recommended image3
Ind Vs ZIM: இந்திய அணிக்கு ஆபத் பாண்டவராக மாறும் சேட்டன்..! மிடில் ஆர்டரில் களம் இறக்கப்படும் சஞ்சு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved