GT vs CSK: குஜராத்துக்கு 'ஷாக்' கொடுத்து ஆர்சிபிக்கு உதவி செய்யுமா சிஎஸ்கே?
ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று முதலாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

GT vs CSK, Match 67: Pitch Conditions & Streaming Details
ஐபிஎல் கிரிக்கெட்டின் 67வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் இரண்டு இடங்களுக்குள் தங்கள் இடத்தைப் பிடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறது.
குஜராத் டைட்டன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி
மறுபுறம் ஐபிஎல் வரலாற்றில் சீசனை சந்தித்துள்ள எம் எஸ் தோனியின் சிஎஸ்கே அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே சிஎஸ்கேவால் 9வது இடத்துக்கு செல்ல முடியும்.
அதே வேளையில் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் அது ஆர்சிபி அணி முதல் 2 இடங்களுக்குள் செல்ல பெரிய உதவியாக இருக்கும். குஜராத் அணி ஜெயித்தால் முதல் இடத்தில் கெத்தாக அமர வாய்ப்புள்ளது.
நரேந்திர மோடி ஸ்டேடியம் பிட்ச் ரிப்போர்ட்
போட்டி நடக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் உள்ள பிட்ச் பேட்டர்களுக்கு சாதகமாக உள்ளது. மேலும் அதிக ஸ்கோரிங் போட்டிக்கான வாய்ப்பு உள்ளது. போட்டி முன்னேறும்போது சுழற்பந்து வீச்சாளர்கள் உதவியைப் பெறுவார்கள்.
டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்யலாம். ஏனெனில் இது பகல் ஆட்டம் மற்றும் சேசிங் எளிதாக இருக்கலாம். முதலில் பேட் செய்யும் அணி 200 ரன்களுக்கு மேல் எடுத்தால் எதிரணிக்கு சவால் அளிக்கலாம்.
சிஸ்கே-குஜராத் டைட்டன்ஸ் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்?
அக்யூவெதர் படி, போட்டியின் தொடக்கத்தில் அகமதாபாத்தில் வெப்பநிலை சுமார் 41 டிகிரி செல்சியஸாக இருக்கும். இறுதியில் 36 டிகிரி செல்சியஸாகக் குறையும். போட்டி நேரங்களில் ஈரப்பதம் 28% முதல் 37% வரை ஏற்ற இறக்கமாக இருக்கும். வானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்பில்லை. சிஎஸ்கேவும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் இதுவரை 7 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் குஜராத் 4 போட்டிகளிலும், சிஎஸ்கே 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் ஐபிஎல் புள்ளிவிவரங்கள்
இந்த ஸ்டேடியத்தில் நடந்த மொத்த போட்டிகள்: 41
முதலில் பேட்டிங் செய்து வென்ற போட்டிகள்: 20
இரண்டாவது பேட்டிங் செய்து வென்ற போட்டிகள்: 21
முடிவு இல்லை: 0
சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்: 175.07
அதிகபட்ச அணியின் ஸ்கோர்: 243
குறைந்தப்பட்ச அணியின் ஸ்கோர் : 89
வெற்றிகரமாக சேஸிங் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்: 204
இரு அணிகளின் பிளேயிங் லெவன்
சென்னை சூப்பர் கிங்ஸ்: எம்எஸ் தோனி (கேப்டன்), ஆயுஷ் மத்ரே, டெவோன் கான்வே, உர்வில் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, அன்ஷுல் கம்போஜ், ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, கலீல் அகமது மற்றும் மதீஷா பதிரனா.
குஜராத் டைட்டன்ஸ்: சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன், ஜோஸ் பட்லர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, ரஷித் கான், அர்ஷத் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், ககிசோ ரபாடா, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா.