- Home
- Sports
- Sports Cricket
- 10 தோல்வி 3 வெற்றியுடன் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் சிஎஸ்கே!
10 தோல்வி 3 வெற்றியுடன் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் சிஎஸ்கே!
CSK Finishes 10th Place in IPL 2025 Points Table : ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோல்வியடைந்ததன் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் முறையாக ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டது.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025
CSK Finishes 10th Place in IPL 2025 Points Table : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றுமொரு தோல்வியை சந்தித்தது. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 62வது போட்டியில் சென்னை-ராஜஸ்தான் அணிகள் மோதின.
சிஎஸ்கே 187 ரன்க்ள் குவிப்பு
இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 187 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்ஸ்மேன்கள் 6 விக்கெட்டுகளை இழந்து எட்டினர். இன்னும் 17 பந்துகள் மீதமிருக்கையில் இலக்கை எட்டி வெற்றி பெற்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது.
ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன்
டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பேட்டிங்கில் சிஎஸ்கே வலுவான தொடக்கத்தை அளித்தது. ஒருபுறம், கான்வே தனது விக்கெட்டை விரைவில் இழந்தாலும், மறுபுறம் இளம் வீரர் ஆயுஷ் 43 ரன்கள் அற்புதமான இன்னிங்ஸ் ஆடினார். மிடில் ஆர்டரில் டெவால்ட் பிரெவிஸ் 42 ரன்கள் எடுத்தார், சிவம் துபே 39 ரன்கள் எடுத்து அணியை மீண்டும் தடம் காண வைத்தார். இதன் மூலம் சென்னை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
சிஎஸ்கே - ஆர்ஆர்
188 ரன்கள் இலக்குடன் இரண்டாவது பேட்டிங்கிற்கு வந்த ராஜஸ்தான் ராயல்ஸ், மீதம் 17 பந்துகள் இருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தானுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 ரன்கள் எடுத்தார். தனது இன்னிங்ஸில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடித்தார். இளம் வீரர் வைபவ் சூர்யவம்சி 57 ரன்கள் அரைசதம் அடித்த இன்னிங்ஸில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் அடித்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 41 ரன்கள் எடுத்தார், இறுதியில் துருவ் ஜூரல் 31* ரன்களுடன் ராஜஸ்தானுக்கு வெற்றியை தேடித்தந்தார்.
பவுலிங்கில் சொதப்பிய சிஎஸ்கே
சென்னையின் பந்துவீச்சுப் பிரிவு மீண்டும் எதிர்பார்த்த அளவுக்குச் சிறப்பாக செயல்படவில்லை. மிடில் ஓவர்களில் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியது, ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றியைத் தொடர்ந்து தக்கவைக்க உதவியது.