- Home
- Sports
- Sports Cricket
- ஆர்சிபியின் டாப் 2 பொசிஷன் இனி சிஎஸ்கே கையில்! எப்படி தெரியுமா? கால்குலேட்டரை எடுங்க!
ஆர்சிபியின் டாப் 2 பொசிஷன் இனி சிஎஸ்கே கையில்! எப்படி தெரியுமா? கால்குலேட்டரை எடுங்க!
ஐபிஎல்லில் ஆர்சிபி அணி முதல் 2 இடங்களை பிடிக்கும் வாய்ப்பு சிஎஸ்கே கையில் உள்ளது. இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

IPL: RCB's top 2 positions in CSK's hand
ஐபிஎல்லில் நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி 42 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 6 விக்கெட் இழந்து 231 ரன்கள் குவித்தது. பின்பு விளையாடிய ஆர்சிபி 19.5 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. பில் சால்ட் (32 பந்தில் 62 ரன்கள்), விராட் கோலி (25 பந்தில் 43 ரன்) தவிர மற்ற அனைவரும் பேட்டிங்கில் சொதப்பினார்கள்.
பெரும் வாய்ப்பை தவற விட்ட ஆர்சிபி
ஆர்சிபி அணியின் பவுலிங் சுத்தமாக சரியில்லை. அந்த அணியின் முன்னணி பாஸ்ட் பவுலர் ஜோஸ் ஹேசில்வுட் அணியில் இல்லாதது வெளிப்படையாக பலவீனமாக தெரிகிறது. ஐபிஎல்லில் இதுவரை ஒவ்வொரு ஆண்டும் புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகளே கோப்பையை கைப்பற்றி உள்ளன. ஏனெனில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைப்பதால் எளிதாக இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும்.
ஆர்சிபிக்கு இருக்கும் இறுதி வாய்ப்பு என்ன?
ஆனால் ஆர்சிபி நேற்று இதற்காக கிடைத்த பொன்னான வாய்ப்பை தவற விட்டு விட்டது. ஆனால் ஆர்சிபி முதல் 2 இடங்களை பிடிக்க இன்னொரு வாய்ப்பும் உள்ளது. ஆனால் அதுவும் சிஎஸ்கே கையில் தான் உள்ளது. இப்போதைய நிலையில் ஆர்சிபி 13 போட்டிகளில் இருந்து 17 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணி 13 போட்டிகளில் இருந்து 18 புள்ளிகளையும், பஞ்சாப் கிங்ஸ் அணி 12 போட்டிகளில் இருந்து 17 புள்ளிகளையும் பெற்றுள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி 13 போட்டிகளில் 16 புள்ளிகளையும் பெற்றுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் எப்படி?
இப்போதைய சூழ்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியே புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் அந்த அணிக்கு இன்னும் 2 போட்டிகள் உள்ளது. மும்பை மற்றும் டெல்லிக்கு எதிராக அந்த அணி வெற்றி பெற்றால் 21 புள்ளிகளுடன் கெத்தாக முதல் இடம் சென்று விடும்.
ஒன்றில் தோற்று, ஒன்றில் ஜெயித்தாலும் முதல் 2 இடங்களுக்கு செல்ல முடியும். குஜராத் அணியை பொறுத்தவரை இன்னும் சிஎஸ்கேவுக்கு எதிராக மீதமிருக்கும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் 20 புள்ளிகளுடன் முதல் 2 இடங்களை பிடிக்கலாம்.
சிஎஸ்கே குஜராத்தை வீழ்த்த வேண்டும்
மும்பை இந்தியன்ஸ் அணியின் வாய்ப்பை பொறுத்தவரை பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் 18 புள்ளிகள் பெற்று முதல் 2 இடங்களை பிடிக்க முடியும். அப்படி ஜெயித்தாலும் மற்ற அணிகளின் முடிவை சார்ந்திருக்க வேண்டும்.
ஆர்சிபி அணியை எடுத்துக் கொண்டால் லக்னோவுக்கு எதிரான போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேன்டும். அப்படி ஜெயித்தால் 19 புள்ளிகள் கிடைக்கும். அதே வேளையில் 18 புள்ளிகளுடன் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி சிஎஸ்கேவிடம் தோற்க வேண்டும்.
ஆர்சிபியின் வாழ்வு சிஎஸ்கே கையில்
இப்படி நடந்தால் குஜராத் 18 புள்ளிகளுடன் நின்று விடும். அதே நேரம் 19 புள்ளிகள் பெற்ற ஆர்சிபி முதல் 2 இடங்களுக்கு சென்று விடும். மேலும் மும்பை பஞ்சாப்பை வீழ்த்தினாலும் 18 புள்ளிகளுடன் 3 அல்லது 4வது இடத்தில் தான் இருக்கும்.
பஞ்சாப் கிங்ஸ் ரன் ரேட் அடிப்படையில் முதல் இடம் செல்லும். ஆகையால் ஆர்சிபி முதல் 2 இடத்துக்கு செல்வது சிஎஸ்கேவின் கையில் தான் உள்ளது. நாளை நடக்கும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சிஎஸ்கே வீழ்த்த வேண்டும்.