- Home
- Sports
- Sports Cricket
- ஜோஸ் ஹேசில்வுட் இந்தியா திரும்பும் தேதி அறிவிப்பு! ஆர்சிபி ரசிகர்களுக்கு ஸ்வீட் நியூஸ்!
ஜோஸ் ஹேசில்வுட் இந்தியா திரும்பும் தேதி அறிவிப்பு! ஆர்சிபி ரசிகர்களுக்கு ஸ்வீட் நியூஸ்!
ஆர்சிபி வீரர் ஜோஸ் ஹேசில்வுட் இந்தியா திரும்புவது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

Josh Hazlewood return to India ahead IPL play offs
நடப்பு ஐபிஎல் தொடர் கிளைமேக்ஸை நெருங்கி விட்டது. மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் பாதியில் ரத்து செய்யப்பட்டதால் வெளிநாடு திரும்பிய ஆர்சிபி வீரர்கள் மீண்டும் இந்தியா திரும்பி ஆர்சிபி அணியுடன் இணைந்து விட்டனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதல்
ஆர்சிபி அணியின் வெளிநாட்டு வீரர்களான பில் சால்ட், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், லுங்கி நிகிடி ஆகியோர் இன்றைய போட்டியில் விளையாட தயாராக உள்ளனர். ஆனால் ஆர்சிபி அணியின் துருப்புச்சீட்டாக இருக்கும் பாஸ்ட் பவுலர் ஜோஸ் ஹேசில்வுட் மட்டும் இன்னும் இந்தியா திரும்பவில்லை. தோள் பட்டையில் ஒரு சிறிய காயம் காரணமாக சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ஹேசில்வுட் விளையாடவில்லை.
ஆர்சிபி அணியில் இணையும் ஜோஸ் ஹேசில்வுட்
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா சென்ற அவர் மீண்டும் எப்போது இந்தியா திரும்புவார்? என எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், ஐபிஎல் பிளே ஆஃப் சுற்று போட்டிகளின்போது ஜோஸ் ஹேசில்வுட் ஆர்சிபி அணிக்காக விளையாடுவார் என்றும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னதாக அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பி ஆர்சிபி அணியுடன் இணைவார் எனவும் ESPNcricinfo தெரிவித்துள்ளது.
காயத்தில் இருந்து மீண்ட ஜோஸ் ஹேசில்வுட்
இந்த இடைவேளையின்போது ஜோஸ் ஹேசில்வுட் பிரிஸ்பேனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக பந்துவீசி பயிற்சி பெற்றார் என்றும் அவர் காயத்தில் இருந்து குணமடைந்து விட்டார் என்றும் ESPNcricinfoகூறியுள்ளது.
ஆர்சிபி அணியில் ஜேக்கப் பெத்தேல் மட்டும் 2 போட்டிகளில் விளையாடி இங்கிலாந்து திரும்புவார். அவர் மே 29 ஆம் தேதி தொடங்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ளார்.
ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் விளையாடுவாரா?
அதே வேளையில் உடல்நலக்குறைவு காரணமாக சில போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த பில் சால்ட் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பேட்டிங் பயிற்சி செய்தார். அவர் இன்றைய போட்டியில் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. காயத்தால் அவதிப்படும் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் இன்றைய போட்டியில் விளையாடுவாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
ஆர்சிபி அணி இப்போது 12 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அந்த அணி மீதமிருக்கும் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற முயற்சிக்கும்.