- Home
- Sports
- Sports Cricket
- ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்! வெளிநாட்டு வீரர்கள் இந்தியா ரிட்டன்! ஹேசில்வுட் வந்துட்டாரா?
ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்! வெளிநாட்டு வீரர்கள் இந்தியா ரிட்டன்! ஹேசில்வுட் வந்துட்டாரா?
ஐபிஎல்லில் ஆர்சிபி அணியின் வெளிநாட்டு வீரர்கள் இந்தியா திரும்பியுள்ளனர். ஜோஸ் ஹேசில்வுட்டும் இந்தியா திரும்பி விட்டாரா? என்பது குறித்து பார்ப்போம்.

RCB Foreign Players Return Update
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட 18வது ஐபிஎல் தொடர் நாளை மீண்டும் தொடங்குகிறது. நாளை நடக்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் பாதியில் ரத்து செய்யப்பட்டதால் அச்சம் காரணமாக அந்தந்த நாடுகளுக்குத் திரும்பிய பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்குத் திரும்பிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்சிபி வெளிநாட்டு வீரர்கள் இந்தியா வருகை
ஆர்சிபி அணியை பொறுத்தவரை இங்கிலாந்து வீரர்கள் பில் சால்ட், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட், மேற்கிந்திய தீவுகளின் ரொமாரியோ ஷெப்பர்ட், தென்னாப்பிரிக்காவின் லுங்கி நிகிடி ஆகியோர் பெங்களூரு வந்து பயிற்சியைத் தொடங்கிவிட்டனர்.
ஆர்சிபி அணிக்காக பில் சால்ட், டிம் டேவிட், லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்கள். ஜேக்கப் பெத்தேல் மட்டும் 2 போட்டிகளில் விளையாடி இங்கிலாந்து திரும்புவார். மே 29 ஆம் தேதி தொடங்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பெத்தேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பில் சால்ட், டிம் டேவிட்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட லுங்கி நிகிடியும் மே 26 ஆம் தேதிக்குள் அணியை விட்டு வெளியேறுவார். இதற்கிடையில், உடல்நலக்குறைவு காரணமாக சில போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த பில் சால்ட் நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த வலைப் பயிற்சி அமர்வின் போது முழுமையாக குணமடைந்து விராட் கோலியுடன் இணைந்து பேட்டிங் செய்தார். சிறப்பான ஃபார்மில் இருந்த டிம் டேவிட் நேற்று உற்சாகமாக பயிற்சி மேற்கொண்டார்.
ஜோஷ் ஹேசில்வுட் இந்தியா திரும்புவாரா?
மேலும் ஆர்சிபி அணியின் முக்கிய வீரரான ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டும் இந்தியா திரும்புவார் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஒரு சிறிய காயம் காரணமாக ஒரு போட்டியில் பங்கேற்காத ஹேசில்வுட் முழுமையாக குணமடைந்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும் ஹேசில்வுட் பிளே ஆப் சுற்றுகளுக்கு முன்பாக இந்தியா வந்து ஆர்சிபி அணியுடன் இணைவார் என்று தகவல்கள் கூறுகின்றன.
ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் காயம்
இதற்கிடையே விரலில் காயம் அடைந்த ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார், குறைந்தது 3 போட்டிகளில் இருந்து விலகும் அபாயத்தில் இருந்தார். ஆனால் ஐபிஎல் இடைநிறுத்தம் அவருக்கு மீள்வதற்கு அவகாசம் அளித்தது. நேற்று அவர் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சி செய்தார். இருப்பினும் நாளை KKR அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவது குறித்து அணி மருத்துவர் முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது. ரஜத் நீக்கப்பட்டால், விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா ஆர்சிபி அணியை வழிநடத்துவார் என கூறப்படுகிறது.
ஆர்சிபி அணி இந்த முறை கோப்பை வெல்லுமா?
ஆர்சிபி அணி தற்போது 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. மேலும் ஒரு வெற்றி பெற்றால் அந்த அணி பிளேஆஃப் சுற்றுக்கு சென்று விடும். மீதமுள்ள மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றால், ஆர்சிபி அணி நிச்சயமாக முதல் 2 இடங்களைப் பிடிக்கும். முக்கிய வீரர்கள் அனைவரும் பார்மில் இருப்பதால் ஆர்சிபி அணி இந்த முறை கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.