- Home
- Politics
- அப்துல்கலாமையே தூக்கி போட்ட திமுக.! சிபிஆருக்கு கை கொடுக்குமா.? ஸ்டாலினின் முடிவு என்ன.?
அப்துல்கலாமையே தூக்கி போட்ட திமுக.! சிபிஆருக்கு கை கொடுக்குமா.? ஸ்டாலினின் முடிவு என்ன.?
குடியரசு துணை தலைவர் தேர்தல் நடைபெறும் நிலையில், பாஜக சிபி ராதாகிருஷ்ணனை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இதனால் திமுகவிற்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அப்துல்கலாமை ஆதரிக்காத திமுக, தற்போது சிபி ராதாகிருஷ்ணனை ஆதரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

குடியரசு துணை தலைவர் தேர்தல்
துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கரின் திடீர் ராஜினாமா காரணமாக மீண்டும் குடியரசு துணை தலைவர் தேர்தலை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஜெகதீப் தன்கர் என்ன ஆனார்.? எதற்காக ராஜினாமா.? என்ற கேள்வி எதிர்கட்சிகள் சார்பாக கேட்கப்பட்டு வருகிறது.
எனவே குடியரசு துணை தலைவர் தேர்தலில் பாஜக அரசின் வேட்பாளருக்கு எதிராக இந்தியா கூட்டணி வேட்பாளரை நிறுத்த காய் நகர்த்தி வருகிறது. இந்த நிலையில் பாஜக தங்கள் கூட்டணி சார்பாக தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவரும், மஹாராஷ்டிரா மாநில ஆளுநருமான சிபி ராதாகிருஷ்ணன் பெயரை குடியரசு துணை தலைவர் வேட்பாளருக்கு முன் மொழிந்துள்ளது.
யார் இந்த சிபி ராதாகிருஷ்ணன்
எதிர்கட்சிகள் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தனது 14-16 வயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜன சங்கத்துடன் அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
அடுத்தாக 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2004 முதல் 2006 வரை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராகப் பணியாற்றினார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் பொறுப்பு தேடி வந்தது.
சி பி ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்குமா.?
அடுத்ததாக தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக செயல்பட்டு வந்தவர் தற்போது 2024 ஆண்டு முதல் மகாராஷ்டிரா ஆளுநராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை துணை குடியரசு தலைவராக நிறுத்துவதாக பாஜக அறிவித்துள்ளது.
பாஜகவின் இந்த அறிவிப்பு திமுகவிற்கு தர்மசங்கடமான நிலை உருவாகியுள்ளது. துணை குடியரசு தலைவராக சிபி ராதாகிருஷண்னை தேர்வு செய்ய திமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் துணை குடியரசு தலைவராக வாய்ப்பு வர வாய்ப்பு உருவாகியுள்ளதை திமுக ஆதரிக்குமா.? என விவாதம் தொடங்கியுள்ளது.
அப்துல்கலாமை கை விட்ட திமுக
தற்போது உள்ள நிலைபோன்று ஏற்கனவே குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த ஏபிஜே அப்துல்காலமை திமுக ஆதரிக்காமல் புறக்கணித்த தகவலும் கூற்படுகிறது. 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் இரண்டாவது பதவிக்காலத்தை திமுக ஆதரிக்கவில்லை.
ஆனால் அப்துல் கலாமோ தனது இரண்டாவது பதவிக்காலத்திற்கு போட்டியிடுவதற்கு அனைத்து கட்சிகளின் ஒருமித்த ஆதரவு இருந்தால் மட்டுமே போட்டி என அறிவித்திருந்தார். ஆனால் அப்போது திமுக தலைவரான கலைஞர் கருணாநிதி, காங்கிரஸின் வேட்பாளரான பிரதிபா பாட்டீலை ஆதரிக்க முடிவு செய்தார்.
சிபி ராதாகிருஷ்ணனுக்கு கை கொடுக்குமா திமுக
இது மட்டுமில்லாமல் மு. கருணாநிதி, "கலாம் என்றால் தமிழில் கலகம் என்று பொருள், இப்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் கலகம் வெடித்துள்ளது" என்று கூறினார். இந்த கருத்து மிகவும் சர்ச்சைக்குரியதாக அப்போது அமைந்தது.
மக்களால் கொண்டாடப்பட்ட குடியரசு தலைவராக இருந்த தமிழகத்தை சேர்ந்த அப்துல்கலாமையே திமுக ஆதரவு தராமல் புறக்கணித்தது. எனவே பாஜகவின் தீவிர ஆதரவாளராக உள்ள சிபி ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்குமா.? என்ற கேள்வி எழுந்துள்ளது.