- Home
- Politics
- தம்பி அணில் குஞ்சு பேன்ஸ் ஓரமா போய் விளையாடுங்க... புலிக்கு குறுக்கே வராதே.! விஜய்யை போட்டுத்தாக்கிய சீமான்
தம்பி அணில் குஞ்சு பேன்ஸ் ஓரமா போய் விளையாடுங்க... புலிக்கு குறுக்கே வராதே.! விஜய்யை போட்டுத்தாக்கிய சீமான்
செஞ்சிக் கோட்டையை சிவாஜி கட்டவில்லை, தமிழரான கோனேரிக்கோன் மன்னன் கட்டியதாக நாம் தமிழர் கட்சி கூறுகிறது. செஞ்சி கோட்டை மீட்பு பொதுக்கூட்டத்தில் சீமான், தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளை மறைத்ததாகவும், விமர்சித்தார்.

செஞ்சி கோட்டை- சீமான் போராட்டம்
செஞ்சி கோட்டையை மராட்டிய மன்னன் சிவாஜி கட்டியதாக மத்திய அரசின் பரிந்துரையின்பேரில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எதிர்பு தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி செஞ்சி கோட்டையை மராட்டிய மன்னன் சிவாஜி கட்டவில்லை, தமிழரான கோனேரிக்கோன் மன்னன் கட்டியதாகக் கூறி வருகிறது.
இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் செஞ்சி கோட்டை மீட்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், தமிழர்களின் வரலாற்று சுவடுகளை திட்டமிட்டு மறைத்தார்கள். வல்லபாய் பட்டேலையும், ஜான்சி ராணியையும் படித்தோம். வா.உ.சி.,யும், வேலுநாச்சியாரும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டனர் என கூறினார்.
விஜய் ரசிகர்களை விமர்சித்த சீமான்
இதனை தொடர்ந்து பேசிய சீமான் நடிகர் விஜய்யின் தவெக தொண்டர்கள் மற்றும் அக்கட்சியின் கொள்கைகள் குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். தவெகவின் கொள்கை என்ன என கேட்டால் தளபதி, தளபதி, தளபதி என சொல்லுகிறார்கள். டேய் அப்படி கத்தாதீங்க டா அப்படி கத்தும் போது தலைவிதி, தலைவிதினு கேட்குது. சரி டா எதுக்கு தான் வந்தீங்க என கேட்டால் டீ விக்க, டீ விக்க என கூறுகிறார்கள்.
டேய் டீ விக்கவா இவ்வளவு பேர் கிளம்பி வந்து இருக்கீங்க, சரி ஓரமா போய்லவபோய் விய்யுங்கள், அணில் குஞ்சானது புலியானது வெறிகொண் டு வேட்டையாடிக்கொண்டிருக்கும் போது குறுக்கே மறுக்கே அணில் போய் கொண்டுள்ளது. பத்திரமா மரத்தில் ஏறி இரு, மரத்தில் ஏறி தொங்கு, அணிலே, அணிலே ஓரமா போய் விளையாடு. குறுக்கே குறுக்கே வராதே
4 மாதத்தில் ஆட்டத்தை திருப்புவேன்
ஒரு மானை, காட்டு எருமை, காட்டு ஆட்டை வேட்டையாடி சாப்பிட்டால் புலிக்கு மரியாதை, அணிலை போய் சாப்பிட்டா எப்படி மரியாதை, யானை படுத்து விட்டா எலி ஏறி ஏறி விளையாடுமாம். அதே மாதிரி என்ன நடக்குது. தம்பி மறுபடியும் மறுபடியும் சொல்லுறேன் சிவன் ஆட்டத்தை சினிமாவில் பார்த்து இருப்பீங்க, ஆனால் இந்த சீமான் ஆட்டத்தை பார்ப்ப பார் நீ, இன்னும் 4 மாதத்தில் மொத்த ஆட்டத்தையும் என் பக்கம் திரும்புவேன் பாரு என சீமான் ஆவேசமாக பேசினார்.
முன்னதாக மேடையில் சீமான் பேசிக்கொண்டிருக்கும் போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பவுன்சர்களுக்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனை பார்த்த சீமான் மேடையில் இருந்து திடீரென இறங்கி கீழே வந்தார். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள் சீமானை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.