- Home
- Lifestyle
- Toilet: தியேட்டர், மால் டாய்லெட் கதவுக்கு கீழே ஏன் பெரிய கேப் இருக்கு? 99% பேருக்கு தெரியாத உண்மை!
Toilet: தியேட்டர், மால் டாய்லெட் கதவுக்கு கீழே ஏன் பெரிய கேப் இருக்கு? 99% பேருக்கு தெரியாத உண்மை!
Toilet: நீங்கள் தியேட்டர், ஷாப்பிங் மால்களின் டாய்லெட்டில் கதவுக்கு கீழே கேப் இருப்பதை பார்த்திருக்கலாம். இவ்வளவு பெரிய கேப் ஏன் உள்ளது? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

பொது கழிப்பறைகளில் ஏன் கேப் இருக்கு?
வெளிநாடுகளில் பொது கழிப்பறை கதவுகளின் கீழே தரைக்கும் கதவுக்கும் இடையே பெரிய இடைவெளி (Gap) இருக்கும். இந்த நடைமுறை நமது நாட்டிலும் தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், ஏன் சில பேருந்து நிலையங்களிலும் கூட இப்போது உள்ளது. அதாவது நீங்கள் ஷாப்பிங் மால்களுக்கோ அல்லது வெளியூர்களுக்கோ செல்லும்போது அங்கிருக்கும் கழிவறை கதவுகளின் கீழே தரைக்கும் கதவுக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதை கவனித்திருப்பீர்கள்.
தனிமனித ரகசியம் காக்கப்பட வேண்டிய இடத்தில் ஏன் இப்படி கேப் விட்டிருக்காஙக என்று நீங்க நினைத்து இருக்கலாம். ஆனால், உலகெங்கும் பின்பற்றப்படும் இந்த வடிவமைப்புக்கு பின்னால் மிகவும் புத்திசாலித்தனமான மற்றும் அவசியமான சில காரணங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று கீழே பார்ப்போம்.
இதையும் படிங்க: Toilet Paper : வெளிநாட்டு டாய்லெட்களில் ஏன் தண்ணீருக்கு பதில் பேப்பர் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?
அவசர கால பாதுகாப்பு
கழிவறைக்குள் இருப்பவருக்கு திடீரென உடல்நலக்குறைவோ அல்லது மயக்கமோ ஏற்பட்டால், கதவு முழுமையாக மூடப்பட்டிருந்தால் வெளியிலிருப்பவர்களுக்கு அது தெரிய வாய்ப்பில்லை. ஆனால், இந்த கீழ் பகுதி இடைவெளி இருப்பதால், உள்ளே இருப்பவர் கீழே விழுந்து கிடப்பதையோ அல்லது ஆபத்தான நிலையில் இருப்பதையோ வெளியில் உள்ளவர்கள் எளிதாகக் கண்டறிந்து உடனடியாக உதவ முடியும்.
சமூக விரோதச் செயல்களைத் தடுத்தல்
பொதுக் கழிப்பிடங்கள் தவறான காரியங்களுக்கும், போதைப்பொருள் பயன்பாட்டிற்கும் புகலிடமாக மாறிவிடக் கூடாது என்பதில் நிர்வாகங்கள் கவனமாக இருக்கின்றன. கதவின் கீழ் இடைவெளி இருக்கும்போது, "வெளியில் நடப்பவர்கள் நம்மை கவனித்துவிடக் கூடும்" என்ற பயம் உள்ளே இருப்பவருக்கு இருக்கும். இந்த பயம், அங்கு சட்டவிரோத செயல்கள் நடப்பதற்கான வாய்ப்பை பெருமளவு குறைக்கிறது.
இதையும் படிங்க: ஃப்ரிட்ஜ் இல்லாம முன்னோர்கள் பாலை எப்படி கெட்டுப்போகாம வச்சிருந்தாங்க? செம டிரிக்ஸ்!
எளிதான பராமரிப்பும் காற்றோட்டமும்
பொதுக் கழிப்பறைகளைத் தொடர்ந்து தூய்மைப்படுத்துவது மிக அவசியமான ஒன்று. தரைப்பகுதியைக் கழுவி சுத்தம் செய்யும்போது, தண்ணீர் தேங்காமல் எளிதாக வெளியேற இந்த இடைவெளி உதவுகிறது. மேலும், கதவு முழுமையாக அடைக்கப்படாமல் இருப்பதால், கழிவறைக்குள் தடையற்ற காற்றோட்டம் இருக்கும். இது துர்நாற்றம் மற்றும் பாக்டீரியாக்கள் பெருகுவதைத் தடுத்து, இடத்தை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.
சிக்கனமான செலவு மற்றும் ஆயுள்
வணிக ரீதியாகவும், பொதுப் பயன்பாட்டிற்கும் அதிக எண்ணிக்கையிலான கழிவறைகளை அமைக்கும்போது செலவைக் குறைக்க வேண்டியுள்ளது. தரை வரை நீண்டிருக்கும் முழுமையான கதவுகளை விட, இந்த வகை சிறிய கதவுகளின் தயாரிப்புச் செலவு மிகவும் குறைவு. அதுமட்டுமின்றி, ஈரப்பதம் மிகுந்த கழிவறைச் சூழலில் முழு நீளக் கதவுகள் சீக்கிரம் சேதமடைந்துவிடும். ஆனால், இந்த டிசைன் கதவுகள் நீண்ட காலம் உழைக்கக்கூடியவை.
இதையும் படிங்க: ஷாம்பூ தலைக்கு மட்டுமல்ல.. துணி முதல் குழாய் கறை வரை நீக்கலாம்.. இதை படிங்க!
அடைபட்ட உணர்வைத் தவிர்த்தல்
சிலருக்கு முற்றிலும் அடைக்கப்பட்ட சிறிய அறைகளுக்குள் இருக்கும்போது ஒருவித பயமோ அல்லது மூச்சுத்திணறல் போன்ற அசெளகரியமோ ஏற்படும். குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இதனால் பதற்றமடைய வாய்ப்புள்ளது. கதவின் கீழ் இருக்கும் இடைவெளி, வெளி உலகத்தோடு ஒரு தொடர்பை ஏற்படுத்துவது போன்ற உணர்வைத் தருவதால், அவர்களின் பயம் நீங்கி ஒரு பாதுகாப்பான உணர்வு கிடைக்கிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

