- Home
- Lifestyle
- Interesting Facts: ஃப்ரிட்ஜ் இல்லாம முன்னோர்கள் பாலை எப்படி கெட்டுப்போகாம வச்சிருந்தாங்க? செம டிரிக்ஸ்!
Interesting Facts: ஃப்ரிட்ஜ் இல்லாம முன்னோர்கள் பாலை எப்படி கெட்டுப்போகாம வச்சிருந்தாங்க? செம டிரிக்ஸ்!
How To Keep Milk Fresh Without Fridge: சுமார் 60-100 ஆண்டுகளுக்கு முன்னால் வீடுகளில் ஃப்ரிட்ஜ் இல்லாதபோது கூட பாலை நீண்ட நாட்கள் கெடாமல் வைத்திருந்தார்கள். நமது முன்னோர்களின் அல்டிமேட் டிரிக்ஸ் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

How To Keep Milk Fresh Without Fridge
இப்போது எல்லா வீட்டிலும் பாலைப் புதியதாக வைத்திருக்க ஃப்ரிட்ஜ் இருக்கிறது. ஆனால், ஒரு 60-100 ஆண்டுகளுக்கு முன்னால் ஃப்ரிட்ஜ் இல்லாத காலத்தில், நம் பாட்டிமார்கள் எல்லாம் பாலை எப்படி கெட்டுப்போகாமல் பார்த்துக்கொண்டார்கள் என்று யோசித்திருக்கிறீர்களா? குறிப்பாக, கோடை காலத்தில் சில மணிநேரங்களிலேயே பால் கெட்டுப்போய்விடும். ஆனால், நம் பெரியவர்கள் சில சரியான முறைகளைப் பயன்படுத்திப் பாலைக் கெட்டுப்போகாமல் பாதுகாத்தார்கள்.
இதையும் படிங்க:டெய்லி ஒரு மணி நேரம் ஃபிரிட்ஜை ஆஃப் பண்ணுனா அதன் ஆயுள் அதிகமாகுமா? உண்மை என்ன?
ஃப்ரிட்ஜ் இல்லாம பாலை எப்படி கெட்டுப்போகாம வச்சிருந்தாங்க?
பால் வீட்டிற்கு வந்ததும் காய்ச்சுவது
அந்தக் காலத்தில், பால் வீட்டிற்கு வந்த உடனேயே அதனை நன்றாகக் காய்ச்சிவிடுவார்கள். இதனால், பால் சீக்கிரம் கெட்டுப்போவதற்குக் காரணமான பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும். காய்ச்சியதற்கு அப்புறம், பாலை இயற்கையாக ஆறவிட்டு, சுத்தமான எவர்சில்வர் (ஸ்டீல்) பாத்திரத்தில் அல்லது மண்பானையில் சேமித்து வைப்பார்கள்.
அடிக்கடி காய்ச்சும் பழக்கம்
பாலை ஒரு முறை மட்டும் காய்ச்ச மாட்டார்கள். கோடை காலத்தில், ஒவ்வொரு 8-10 மணி நேரத்திற்கு ஒருமுறை பாலை மீண்டும் காய்ச்சுவார்கள். சில சமயம் மூன்றாவது முறைகூட காய்ச்ச வேண்டியிருக்கும். இப்படிச் செய்வதனால், பாக்டீரியா வளர்ச்சி குறைந்து, பால் நீண்ட நேரத்திற்குப் புதியதாக இருக்கும்.
இதையும் படிங்க:ஷாம்பூ தலைக்கு மட்டுமல்ல.. துணி முதல் குழாய் கறை வரை நீக்கலாம்.. இதை படிங்க!
சரியான இடத்தில் பாலைச் சேமிப்பது
பழைய வீடுகளின் அமைப்பே பாலைப் பாதுகாக்க உதவியாக இருந்தது. தடிமனான சுவர்கள், நல்ல காற்றோட்டமான அறைகள், குளிர்ச்சியான தரைகள் ஆகியவை வீட்டிற்குள் வெப்பநிலையைக் குறைவாக வைத்திருந்தன. பல பேர், பால் பாத்திரத்தைத் தண்ணீர் நிரப்பிய ஒரு தட்டில் வைப்பார்கள். இது பாலைக் கொஞ்சம் குளிர்ச்சியாக வைத்திருக்கும். மண்பானையில் சேமிக்கும் பாலும் குளிர்ச்சியாக இருக்கும், ஏனெனில் பானையின் மேற்பரப்பில் இருந்து தண்ணீர் மெதுவாக ஆவியாகி குளிர்ச்சியைத் தரும்.
சின்ன சின்ன மற்ற பழக்கங்கள்
நம் பெரியவர்கள் சில எளிய பழக்கங்களையும் கடைப்பிடித்தார்கள். தூசி, அழுக்கு எதுவும் பாலிற்குள் போகாமல் இருக்க, எப்பொழுதும் பாலை மூடி வைப்பார்கள். பால் கறக்க எப்பொழுதும் சுத்தமான பாத்திரங்களைத்தான் பயன்படுத்துவார்கள். பழைய பாலுடன் புதிய பாலைக் கலப்பதாக இருந்தால், முதலில் அதனை நன்றாகக் காய்ச்சிவிட்டுத்தான் சேர்ப்பார்கள். இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களால்தான் பால் புதியதாக இருந்தது.
இதையும் படிங்க: ஃபிரிட்ஜில் பேக்கிங் சோடா வச்சா இவ்ளோ நடக்குமா? 30 நிமிடத்தில் புத்தம் புதுசாக மாறும் மேஜிக்!
துளசி மற்றும் ஏலக்காய் போடுதல்
நமது முன்னோர்கள் பாலை நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் வைக்க, பால் காய்ந்ததும் அதில் சில துளசி இலைகளையோ அல்லது தட்டிய ஏலக்காயையோ போடுவார்கள். துளசியில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் ஏலக்காயும் பாலில் கிருமிகள் உருவாவதைத் தடுத்து, பால் புளித்துப்போகாமல் நீண்ட நேரம் பாதுகாக்கும். அதோடு பாலுக்கு நல்ல நறுமணத்தையும் தரும்.
ஆடை மற்றும் நெய் தயாரிப்பு
அடிக்கடி பாலைக் காய்ச்சுவதனால், பாலின் மேல் தடிமனான பாலாடை படியும். இந்த ஆடையைப் பல நாட்கள் சேகரித்து, அதிலிருந்து வெண்ணெய் எடுத்து, அப்புறம் நெய்யாக மாற்றுவார்கள். இப்படிப் பாலைப் பாதுகாக்கும் முறை, வீட்டிற்குத் தேவையான வெண்ணெயையும், நெய்யையும் கொடுத்தது.
மின்வெட்டு ஏற்பட்டால் இனி இப்படி செய்யுங்க
இன்று ஃப்ரிட்ஜ் இருந்தாலும், மின்வெட்டு ஏற்படும்போதோ அல்லது வேறு சில சமயங்களிலோ பாலைப் பாதுகாக்கக் கஷ்டமாக இருக்கும். அந்த மாதிரி நேரத்தில், இந்த பழைய முறைகளைப் பயன்படுத்தி நீங்களும் பாலைப் புதியதாக வைத்துக்கொள்ளலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

