Tamil

மழைக்காலத்தில் இந்த உணவுகளை தொடவே தொடாதீங்க

Tamil

ஸ்ட்ரீட் ஃபுட்

மழைக்காலத்தில் தெருவோர உணவுகளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். திறந்தவெளியில் உணவு தயாரிப்பதால், காற்றில் உள்ள ஈரப்பதம், தூசு போன்றவை உணவில் கலக்க வாய்ப்புள்ளது.

Image credits: Instagram
Tamil

சமைக்காத கீரைகள்

சமைக்காத கீரை, காய்கறி சாலட்களை மழைக்காலத்தில் சாப்பிட வேண்டாம். இவற்றில் அழுக்கு, கண்ணுக்குத் தெரியாத கிருமிகள், தூசு போன்றவை இருக்க வாய்ப்பு அதிகம்.

Image credits: Getty
Tamil

பழைய உணவுகள்

மீதமான மற்றும் பல நாட்கள் ஆன பழைய உணவுகளைச் சாப்பிடுவது உடல்நலத்திற்குக் கேடு. மீதமான உணவுகளைச் சரியான முறையில் ஃபிரிட்ஜில் வைப்பதும் அவசியம்.

Image credits: Getty
Tamil

வறுத்த, பொரித்த உணவுகள்

மழைக்கு இதமாக பஜ்ஜி, போண்டா என வறுத்த உணவுகளைச் சாப்பிடத் தோன்றும். ஆனால், இவற்றை அதிகமாகச் சாப்பிட்டால் செரிமானப் பிரச்னைகள் ஏற்படும்.

Image credits: Getty
Tamil

பழைய மீன்கள்

பல நாட்கள் ஆன பழைய மீன்களைச் சாப்பிடுவது வயிற்றுக்குக் கேடு விளைவிக்கும். எனவே, எப்போதும் ஃபிரெஷ்ஷான மீன்களை மட்டுமே வாங்கிச் சமைத்துச் சாப்பிட வேண்டும்.

Image credits: Getty
Tamil

இனிப்பு பானங்கள்

மழைக்காலத்தில் சர்க்கரை அதிகம் உள்ள பானங்கள், உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவதும் வயிற்று உபாதைகளுக்கு வழிவகுக்கும். இது செரிமான மண்டலத்தைப் பாதிக்கும்.

Image credits: Getty

Gold Chain: 3 கிராமில் அசத்தலான லேட்டஸ்ட் தங்க செயின் டிசைன்கள் இதோ!

குண்டா இருக்கீங்களா? இந்த புடவைகளை கட்டுனா ஒல்லியா தெரிவீங்க!

Ginger Tea: காலையில் ஒரு கப் இஞ்சி டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா!

வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் 7 நன்மைகள்