MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Fridge : டெய்லி ஒரு மணி நேரம் ஃபிரிட்ஜை ஆஃப் பண்ணுனா அதன் ஆயுள் அதிகமாகுமா? உண்மை என்ன?

Fridge : டெய்லி ஒரு மணி நேரம் ஃபிரிட்ஜை ஆஃப் பண்ணுனா அதன் ஆயுள் அதிகமாகுமா? உண்மை என்ன?

Fridge Tips : கரெண்ட் பில்லை கம்மி பண்ண சிலர் அடிக்கடி வீட்டில் ஃபிரிட்ஜை ஆஃப் பண்ணி போடுவார்கள். அப்படி செய்தால் நல்லதா? கெட்டதா? என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 11 2026, 12:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Fridge maintenance tips
Image Credit : AI Image

Fridge maintenance tips

இப்போலாம் ஃபிரிட்ஜ் இல்லாத கிச்சனே இல்லை. பால், பழம், காய்கறின்னு பல நாள் முன்னாடி வாங்கின பொருளைக்கூட ஃபிரிட்ஜ்ல வெச்சு பத்திரமா பாதுகாக்க முடியுது. நாம கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசுல வாங்குன ஃபிரிட்ஜ், ரொம்ப நாளைக்கு உழைக்கணும்னுதான் எல்லாரும் நினைப்போம். அது அடிக்கடி ரிப்பேர் ஆனா செலவுதான் அதிகமாகும். அதனால, ஃபிரிட்ஜ் சீக்கிரம் வீணாகாம இருக்கணும்னு பலரும் ரொம்ப கவனமா இருப்பாங்க.

'டெய்லி ஒரு மணி நேரம் ஃபிரிட்ஜை ஆஃப் பண்ணுங்க, அப்போதான் மெஷின் நல்லா இருக்கும்'னு சிலர் சொல்றதைக் கேட்டிருப்போம். இன்னும் சிலர், 'வாரத்துக்கு ஒரு தடவையாவது ஃபிரிட்ஜுக்கு ரெஸ்ட் குடுங்க'னு அட்வைஸ் பண்ணுவாங்க. ஆனா, ஃபிரிட்ஜை எப்போ ஆஃப் பண்ணனும், அதுக்கு ஓய்வு தேவையாங்கிற கேள்விக்கு பலருக்கும் சரியான பதில் தெரியாது.

Fridge: ஃபிரிட்ஜில் பேக்கிங் சோடா வச்சா இவ்ளோ நடக்குமா? 30 நிமிடத்தில் புத்தம் புதுசாக மாறும் மேஜிக்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஃபிரிட்ஜை ஆஃப் பண்ணலாமா?
Image Credit : AI

ஃபிரிட்ஜை ஆஃப் பண்ணலாமா?

நீங்களும் உங்க வீட்டு ஃபிரிட்ஜை தினமும் அல்லது வாரத்துக்கு ஒருமுறை ஆஃப் பண்ற பழக்கம் இருந்தா, அதை உடனே நிறுத்திடுங்க. ஃபிரிட்ஜ் மெஷினுக்கு நீங்க தனியா ஓய்வு கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை. இப்போ வர்ற நவீன ஃபிரிட்ஜ்கள், சரியான வெப்பநிலையை மெயின்டெய்ன் பண்ற மாதிரிதான் டிசைன் செய்யப்பட்டிருக்கு.

நிபுணர்கள் சொல்றது என்னன்னா, ஃபிரிட்ஜை ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு மாத்தும்போது, சுத்தம் செய்யும்போது, அல்லது ரொம்ப நாளைக்கு பயன்படுத்தாம இருக்கும்போது மட்டும் ஆஃப் பண்ணா போதும்.

Related Articles

Related image1
Fridge: உங்க வீட்டு ஃபிரிட்ஜ் மேல இந்த பொருட்கள் இருக்கா? உடனே மாத்துங்க! இல்லைனா பண நஷ்டம் நிச்சயம்!
Related image2
Fridge: ஃபிரிட்ஜில் பேக்கிங் சோடா வச்சா இவ்ளோ நடக்குமா? 30 நிமிடத்தில் புத்தம் புதுசாக மாறும் மேஜிக்!
34
காத்திருக்கும் ஆபத்து
Image Credit : gemini

காத்திருக்கும் ஆபத்து

மத்தபடி அதை ஆஃப் பண்ண வேண்டியதில்லை, பண்ணவும் கூடாது. நவீன ஃபிரிட்ஜ்கள்ல 'தெர்மோஸ்டாட்' (Thermostat)னு ஒரு கருவி இருக்கும். அதுவே உள்ளே இருக்கிற வெப்பநிலைக்கு ஏத்த மாதிரி ஆட்டோமேட்டிக்கா ஆன் மற்றும் ஆஃப் ஆகிக்கும். அதனால நீங்க எதுவும் செய்யத் தேவையில்லை.

ஃபிரிட்ஜ் சீக்கிரம் வீணாகிடும்னு நினைச்சு நீங்க அடிக்கடி ஆன், ஆஃப் செஞ்சா, அதோட மெஷின் பழுதாகத்தான் அதிக வாய்ப்பிருக்கு. அதுமட்டுமில்லாம, கரண்ட் பில்லும் அதிகமாகும். ஏன்னா, ஒவ்வொரு தடவை ஆன் பண்ணும்போதும், ஃபிரிட்ஜ் பழைய குளிர்ச்சிக்கு வர அதிக சக்தியை எடுத்துக்கும்.

44
உணவுகள் கெட்டுப்போகும்
Image Credit : chat gpt

உணவுகள் கெட்டுப்போகும்

இதனால உள்ளே வெச்சிருக்கிற உணவுப் பொருட்கள் சீக்கிரம் கெட்டுப்போகும். அடிக்கடி ஆன், ஆஃப் பண்றது கம்ப்ரஸரோட ஆயுளையும் குறைச்சிடும். ஒருவேளை ஃபிரிட்ஜை ஆஃப் பண்ணிட்டு, கதவை மூடி வெச்சா, உள்ளே பூஞ்சை பிடிக்கவும் வாய்ப்பிருக்கு.

உங்க வீட்டு ஃபிரிட்ஜ் பல வருஷம் நல்லா உழைக்கணும்னா, அவசரத் தேவைகளைத் தவிர மத்த எந்தக் காரணத்துக்காகவும் அதை ஆஃப் பண்ணாதீங்க. அது எப்பவும் ஆன்லேயே இருக்கட்டும். டெக்னாலஜி மேல நம்பிக்கை வைங்க. அடிக்கடி ஆஃப் பண்ணா ஃபிரிட்ஜ் லைஃப் அதிகமாகும்ங்கிற தவறான நம்பிக்கையை விட்டுடுங்க.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Shampoo Hacks: ஷாம்பூ தலைக்கு மட்டுமல்ல.. துணி முதல் குழாய் கறை வரை நீக்கலாம்.. இதை படிங்க!
Recommended image2
காரசாரமான இறால் தொக்கு சட்டென செய்வது எப்படி? ஈஸி டிப்ஸ் இதோ...
Recommended image3
Rudraksha Benefits: ருத்ராட்சம்னா என்ன? ஒரிஜினல், போலி கண்டுபிடிப்பது எப்படி?
Related Stories
Recommended image1
Fridge: உங்க வீட்டு ஃபிரிட்ஜ் மேல இந்த பொருட்கள் இருக்கா? உடனே மாத்துங்க! இல்லைனா பண நஷ்டம் நிச்சயம்!
Recommended image2
Fridge: ஃபிரிட்ஜில் பேக்கிங் சோடா வச்சா இவ்ளோ நடக்குமா? 30 நிமிடத்தில் புத்தம் புதுசாக மாறும் மேஜிக்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved