- Home
- Lifestyle
- Fridge: கரண்ட் பில்லை மிச்சப்படுத்த ஃப்ரிட்ஜை ஆஃப் செய்றீங்களா? நிபுணர்கள் சொல்வதை கேளுங்க!
Fridge: கரண்ட் பில்லை மிச்சப்படுத்த ஃப்ரிட்ஜை ஆஃப் செய்றீங்களா? நிபுணர்கள் சொல்வதை கேளுங்க!
Fridge: உங்க வீட்டில் கரண்ட் பில்லை மிச்சப்படுத்த அடிக்கடி ஃப்ரிட்ஜை ஆஃப் செய்றீங்களா? இதை செய்யக்கூடாது என நிபுணர்கள் கூறுகின்றனர். அது ஏன்? என இந்த செய்தியில் பார்க்கலாம்.

கரண்ட் பில்லை மிச்சப்படுத்த ஃப்ரிட்ஜை ஆஃப் செய்றீங்களா?
நடுத்தரக் குடும்பங்களுக்கு மின்சார கட்டணம் பெரும் தலைவலியாக இருக்கிறது. இதனால் வீட்டில் கரண்ட் பில்லை குறைக்க மின்சாதங்கள் பயன்பாட்டை ஓரளவு குறைப்பார்கள்.
வீட்டின் கரண்ட் பில்லை எப்படியாவது மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காகப் பலரும் செய்யும் முதல் காரியம், வீட்டில் 24 மணி நேரமும் ஓடிக்கொண்டிருக்கும் ஃப்ரிட்ஜை (Refrigerator) அவ்வப்போது ஆஃப் செய்து வைப்பதுதான். குறிப்பாக, இரவு நேரங்களிலோ அல்லது வார இறுதி நாட்களில் 2, 3 நாட்கள் வெளியூர் செல்லும்போதோ மின்சாரத்தைச் சேமிப்பதாக நினைத்து ஃப்ரிட்ஜ் சுவிட்சை அணைத்து விடுகின்றனர்.
24 மணி நேரமும் இயங்கும் அத்தியாவசியப் பொருளான ஃப்ரிட்ஜை, இது போன்ற சில நாட்கள் பயணத்தின் போது அணைப்பது சரியானதா இல்லையா என்பது குறித்து தொழில்நுட்ப நிபுணர்கள் முக்கிய விளக்கங்களை அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: உங்க வீட்டு ஃபிரிட்ஜில் ஒரு A4 பேப்பரை வைங்க! கரண்ட் பில் பாதியாக குறையும்! சீக்ரெட் ட்ரிக்!
குறுகிய காலப் பயணம் (2 முதல் 4 நாட்கள்)
நீங்கள் வார இறுதி விடுமுறையையொட்டி 2 முதல் 4 நாட்கள் மட்டுமே வெளியூர் செல்கிறீர்கள் என்றால், ஃப்ரிட்ஜை ஆஃப் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உணவுப் பொருட்கள் வீணாதல்: ஃப்ரிட்ஜில் இருக்கும் பால், தயிர், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற சீக்கிரம் கெட்டுப்போகும் பொருட்கள், மின் இணைப்பைத் துண்டிப்பதால் வீணாகிவிடும் அபாயம் உள்ளது.
கம்ப்ரஸர் பாதிப்பு: ஃப்ரிட்ஜை அடிக்கடி ஆன் மற்றும் ஆஃப் செய்வது, அதன் முக்கிய பாகமான கம்ப்ரஸருக்கு (Compressor) கூடுதல் அழுத்தத்தைக் கொடுத்து ஆயுளைக் குறைக்கும்.
மின்சார நுகர்வு: தற்போதைய நவீன இன்வெர்ட்டர் ஃப்ரிட்ஜ்கள், கதவைத் திறக்காமல் மூடியே இருக்கும்போது மிகக் குறைந்த மின்சாரத்தையே நுகரும். எனவே, சில நாட்களுக்கு ஆஃப் செய்வதால் பெரிய அளவில் மின் கட்டணம் குறைந்துவிடாது.
இதையும் படிங்க: வாஷிங் மெஷின் கரண்ட்டை உறிஞ்சுகிறதா? EB பில்லை பாதியாக குறைக்க 5 டிப்ஸ்!
நீண்ட காலப் பயணம் (1 வாரத்துக்கு மேல்)
அதேநேரம், நீங்கள் ஒரு வாரம் அல்லது அதற்கும் மேற்பட்ட நாட்களுக்கு வெளியூர் செல்லத் திட்டமிட்டால், தாராளமாக ஃப்ரிட்ஜை ஆஃப் செய்யலாம். ஆனால், அதற்கு முன் இந்த பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்:
ஃப்ரிட்ஜை ஆஃப் செய்வதற்கு முன்பு, உள்ளே இருக்கும் அனைத்து உணவுப் பொருட்களையும் முழுமையாகக் காலி செய்ய வேண்டும்.
பொருட்கள் உள்ளே இருக்கும்போதே ஆஃப் செய்தால், குளிர்ச்சி குறைந்து உணவுகள் அழுகி, கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கும். மேலும், பூஞ்சை காளான்கள் உருவாகி ஃப்ரிட்ஜையே பாழாக்கிவிடும். எனவே, ஃப்ரிட்ஜை முழுமையாக காலி செய்து, உட்புறத்தைத் துடைத்து, ஈரப்பதம் இல்லாமல் உலர வைத்த பிறகே மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும்.
இதையும் படிங்க:கரண்ட், அயர்ன் பாக்ஸ் தேவையில்லை! 5 நிமிடத்தில் துணி சுருக்கத்தை போக்க மேஜிக் டிரிக்ஸ்!
ஃப்ரிட்ஜ் வைத்திருப்பவர்கள் இதையும் கவனிங்க
அன்றாடப் பயன்பாட்டின் போது சூடான உணவுகளை நேரடியாக ஃப்ரிட்ஜிற்குள் வைக்கக் கூடாது. அது ஃப்ரிட்ஜின் வெப்பநிலையை உயர்த்தி, குளிர்விக்க அதிக மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். அதேபோல், ஃப்ரிட்ஜிற்குள் காற்றோட்டம் சீராக இருக்க அளவுக்கு அதிகமாகப் பொருட்களைத் திணித்து வைப்பதையும் தவிர்க்க வேண்டும்.
எனவே, பொதுமக்கள் தங்களின் பயண நாட்களைக் கணக்கில் கொண்டு, அதற்கு ஏற்பச் சரியான முடிவை எடுப்பதன் மூலம் மின்சாரத்தையும் மிச்சப்படுத்தி, ஃப்ரிட்ஜின் ஆயுளையும் நீட்டிக்க முடியும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

