MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Ironing Hacks: கரண்ட், அயர்ன் பாக்ஸ் தேவையில்லை! 5 நிமிடத்தில் துணி சுருக்கத்தை போக்க மேஜிக் டிரிக்ஸ்!

Ironing Hacks: கரண்ட், அயர்ன் பாக்ஸ் தேவையில்லை! 5 நிமிடத்தில் துணி சுருக்கத்தை போக்க மேஜிக் டிரிக்ஸ்!

Ironing Hacks: நீங்கள் அவசரமாக வெளியேபோகும்போது துணிகளில் சுருக்கம் இருக்கா? இனி கவலை வேண்டாம். அயர்ன் பாக்ஸ் இல்லாமலேயே வெறும் ஐந்தே நிமிடத்தில் துணி சுருக்கத்தை போக்கி புத்தம் புதிய ஆடை போல் மாற்றும் டிரிக்ஸ் குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 04 2026, 07:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
துணி சுருக்கத்தை 5 நிமிடத்தில் போக்கலாம்
Image Credit : AI

துணி சுருக்கத்தை 5 நிமிடத்தில் போக்கலாம்

நாம் ஒரு முக்கியமான மீட்டிங் அல்லது எதாவது விஷேஷ நிகழ்ச்சிக்கு செல்லும்போது தான் நமக்கு மிகவும் பிடித்த டிரஸ்ஸில் சுருக்கம் (Wrinkles) இருந்து நமது ஹேப்பி மைண்ட்டையே கெடுத்து விடும். அந்த நேரத்தில் வீட்டில் அயர்ன் பாக்ஸ் இல்லாவிட்டாலோ அல்லது அயர்ன் பாக்ஸ் இருந்தும் கரண்ட் இல்லாமல் இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகி விடும். ஆனால் இனிமேல் கவலை வேண்டாம். அயர்ன் பாக்ஸ் இல்லாமலேயே வெறும் 5 நிமிடத்தில் துணி சுருக்கத்தை நீக்கி, உடையை ஃபிரெஷ்ஷாக மாற்ற சில சூப்பர் டிரிக் குறித்து விரிவாக பார்க்கலாம்.

துணிகளில் சுருக்கம் ஏற்பட இதுதான் காரணம்

துணிகளை நீண்ட நாட்கள் அல்மாராவில் ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கும்போது, பயணத்தின்போது சூட்கேஸில் அழுத்தி வைக்கும்போது அல்லது துவைத்த பின் சரியாக காய வைக்காதபோது சுருக்கங்கள் ஏற்படுகின்றன. துணியில் உள்ள இழைகள் மடிந்து கொள்வதே இதற்குக் காரணம். கொஞ்சம் வெப்பம், ஈரம் அல்லது சரியான முறையில் இழுப்பதன் மூலம் இந்த இழைகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்து சுருக்கத்தை நீக்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அயர்ன் பாக்ஸ் இல்லாமல் சுருக்கத்தை நீக்க 3 எளிய வழிகள்
Image Credit : Getty

அயர்ன் பாக்ஸ் இல்லாமல் சுருக்கத்தை நீக்க 3 எளிய வழிகள்

சுடுதண்ணீரில் குளிக்கும்போது இந்த முறையை சுலபமாகப் பயன்படுத்தலாம். சுருக்கமான உடையை ஒரு ஹேங்கரில் மாட்டி, பாத்ரூமில் சற்று தள்ளி தொங்க விடுங்கள். நீங்கள் குளிக்கும்போது உருவாகும் சூடான நீராவி, துணியின் மடிந்த இழைகளை மென்மையாக்கும். பத்து நிமிடம் கழித்து துணியை வெளியே எடுத்து, கைகளால் லேசாகக் கீழ்நோக்கி இழுத்து காய வைத்தால், சுருக்கங்கள் மாயமாகிவிடும்.

இதையும் படிங்க: உங்க வீட்டு ஃபிரிட்ஜில் கரண்ட் பில் பாதியாக குறைய சீக்ரெட் ட்ரிக்! https://tamil.asianetnews.com/gallery/life-style/how-to-reduce-fridge-electricity-bill-a4-paper-trick-grzxz9n

34
ஹேர் டிரையர் இதுக்கும் பயன்படும்
Image Credit : meta ai

ஹேர் டிரையர் இதுக்கும் பயன்படும்

இப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் ஹேர் டிரையர் இருக்கிறது. அவசர நேரத்தில் இது ஒரு அயர்ன் பாக்ஸ் போலவே வேலை செய்யும். முதலில், சுருக்கமான துணியின் மீது லேசாக தண்ணீர் தெளித்து ஈரமாக்குங்கள். பிறகு, ஹேர் டிரையரை ஆன் செய்து, அதன் சூடான காற்றை சுருக்கங்கள் உள்ள இடத்தில் காட்டி, கைகளால் துணியை நீவி விடுங்கள். கவனம், டிரையரை துணிக்கு மிக அருகில் காட்ட வேண்டாம், துணி கருகிவிடும் அபாயம் உள்ளது.

ஈரமான டவல் முறை

துணியில் உள்ள சின்ன சின்ன சுருக்கங்களை நீக்க இந்த முறை சிறந்தது. சுருக்கமான சட்டை அல்லது உடையை ஒரு தட்டையான மேஜை மீது விரிக்கவும். பிறகு, ஒரு சுத்தமான காட்டன் டவலை தண்ணீரில் நனைத்து, நீரை நன்றாகப் பிழிந்து விடுங்கள். இந்த ஈரமான டவலை துணியின் சுருக்கமான பகுதி மீது வைத்து, கையால் நன்றாக அழுத்துங்கள். பிறகு, துணியை ஹேங்கரில் மாட்டி ஃபேன் காற்றில் காய வைத்தால் போதும். இது காட்டன் துணிகளுக்கு மிகவும் ஏற்றது.

44
வினிகர் ஸ்ப்ரே
Image Credit : Asianet News

வினிகர் ஸ்ப்ரே

ஒரு பங்கு வெள்ளை வினிகருடன் (White Vinegar) மூன்று பங்கு தண்ணீர் கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். சுருக்கம் உள்ள ஆடைகளின் மீது இதை லேசாக ஸ்ப்ரே செய்து, கைகளால் இழுத்து நேராக்கினால் சுருக்கங்கள் காணாமல் போகும். வினிகர் வாசனை காய்ந்ததும் போய்விடும், துணியும் ஃபிரெஷ்ஷாகிவிடும்.

துணி காய வைக்கும்போது கவனிக்க வேண்டியவை

துணிகளைத் துவைத்தவுடன் அப்படியே காயப் போடுவதற்குப் பதிலாக, இரண்டு மூன்று முறை நன்றாக உதறி (Shake) காய வைத்தால், பாதி சுருக்கங்கள் அப்போதே போய்விடும். ஹேங்கர்களைப் பயன்படுத்தி துணிகளைக் காய வைப்பது இன்னும் சிறந்தது.

இதையும் படிங்க: உங்கள சுத்தி இருக்கவங்க நல்லவங்களா? கெட்டவங்களா? https://tamil.asianetnews.com/gallery/life-style/5-critical-moments-that-reveal-a-persons-true-character-according-to-human-psychology-v7pw7sm

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
இந்தியா
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Medicine Storage: மாத்திரைகள், மருந்துகளை இந்த இடங்களில் வைக்காதீர்கள்! எங்கெல்லாம் தெரியுமா?
Recommended image2
Curry Leaf Growing Tips: கருவேப்பிலை செடி புதர் போல அடர்த்தியா வளரணுமா? இந்த சூப்பர் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
Recommended image3
Marriage Registration : திருமணத்தைப் பதிவு செய்யவில்லையா? பின்னாளில் இந்த சிக்கல்கள் வரலாம்!
Related Stories
Recommended image1
Iron Box Cleaning Tips: அயர்ன் பாக்ஸ் அடியில் கறை படிஞ்சிருக்கா? புதுசு போல மாற்ற இதோ 6 எளிய வீட்டு டிப்ஸ்!
Recommended image2
Water Tank Cleaning Tips: ஆயிரக்கணக்கில் செலவின்றி வாட்டர் டேங்க் சுத்தம் செய்ய 3 எளிய வழிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved