MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Fridge: உங்க வீட்டு ஃபிரிட்ஜில் ஒரு A4 பேப்பரை வைங்க! கரண்ட் பில் பாதியாக குறையும்! சீக்ரெட் ட்ரிக்!

Fridge: உங்க வீட்டு ஃபிரிட்ஜில் ஒரு A4 பேப்பரை வைங்க! கரண்ட் பில் பாதியாக குறையும்! சீக்ரெட் ட்ரிக்!

Fridge: உங்க வீட்டு பிரிட்ஜ் கரண்ட் பில் எகிற வைக்கிறது என கவலையா இருக்கா? ஒரே ஒரு A4 பேப்பர் மூலம் கரண்ட் பில் அதிகமாவதை தடுத்து நிறுத்த முடியும். இது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 03 2026, 06:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மின்சாரத்தை உறிஞ்சி எடுக்கும் பிரிட்ஜ்
Image Credit : AI

மின்சாரத்தை உறிஞ்சி எடுக்கும் பிரிட்ஜ்

இன்றைய காலகட்டத்தில் நடுத்தரக் குடும்பங்களின் மிகப்பெரிய கவலையே மாதாமாதம் எகிறி வரும் மின்சாரக் கட்டணம்தான் (Electricity Bill). நமது வீட்டில் இருக்கும் வாஷிங்மெஷின், எந்த நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் டிவி மற்றும் மின்விசிறிகள் மின்சார கட்டணத்தை எகிற வைக்கின்றன. இந்த பொருட்களை 24 மணி நேரமும் ஓடிக்கொண்டிருக்கும் 'பிரிட்ஜ்' (Fridge) தான் அதிக மின்சாரத்தை உறிஞ்சி நமது ஹார்ட் பீட் எகிற வைக்கிறது.

ஆனால், ஒரே ஒரு ஏ4 (A4) பேப்பரை வைத்து உங்கள் வீட்டு பிரிட்ஜ் (Refrigerator) கரண்ட்டை அதிகமாக இழுக்கிறதா? இல்லையா? என்பதை வெறும் 30 வினாடிகளில் கண்டுபிடித்துவிடலாம். கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறதா? அது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம்.

இதையும் படிங்க: ஃபிரிட்ஜுக்கும் சுவருக்கும் எவ்வளவு கேப் வேணும்:https://tamil.asianetnews.com/gallery/life-style/pro-tips-for-fridge-placement-in-house-to-reduce-electricity-bills-dby3gro

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
30 வினாடி 'பேப்பர் டெஸ்ட்'? (The A4 Paper Test)
Image Credit : Chatgpt

30 வினாடி 'பேப்பர் டெஸ்ட்'? (The A4 Paper Test)

உங்கள் வீட்டு பிரிட்ஜ் கதவின் ஓரங்களில் காந்தத்துடன் கூடிய ரப்பர் பீடிங் (Gasket) இருக்கும். இது பிரிட்ஜின் உள்ளே இருக்கும் குளிர்ச்சி வெளியே போகாமல் தடுப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் பயன்பாட்டிற்குப் பிறகு, இந்த ரப்பர் தளர்ந்துபோக வாய்ப்புள்ளது.

இதைச் சோதிக்க, ஒரு ஏ4 பேப்பரை எடுத்துக்கொள்ளுங்கள். பிரிட்ஜ் கதவைத் திறந்து, பேப்பரின் பாதி அளவு உள்ளேயும், பாதி அளவு வெளியேயும் இருக்குமாறு வைத்து கதவை இறுக்கமாக மூடுங்கள். இப்போது, வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பேப்பரை மெதுவாக கையை வைத்து இழுத்துப் பாருங்கள்.

முடிவு 1: பேப்பர் நகராமல் இறுக்கமாக மாட்டியிருந்தால், உங்கள் பிரிட்ஜ் ரப்பர் 'பெர்ஃபெக்ட்' ஆக உள்ளது என்று அர்த்தம்.

முடிவு 2: பேப்பர் எந்தவித சிரமமும் இல்லாமல் எளிதாக கையில் வந்துவிட்டால், உங்கள் பிரிட்ஜ் கதவின் ரப்பர் தளர்ந்துவிட்டது என்று அர்த்தம்.

Related Articles

Related image1
Fridge Mistakes: ஃப்ரிட்ஜில் வைக்கும் பழக்கம்தான் பிரச்சினையா? பலரும் செய்யும் பெரிய தவறு!
34
இதனால் கரண்ட் பில் எப்படி அதிகமாகிறது?
Image Credit : stockPhoto

இதனால் கரண்ட் பில் எப்படி அதிகமாகிறது?

ரப்பர் தளர்வாக இருந்தால், உள்ளே இருக்கும் குளிர்ந்த காற்று வெளியே கசிந்துகொண்டே இருக்கும். இதனால் பிரிட்ஜின் உள்ளே வெப்பநிலை உயரும். உடனே, பிரிட்ஜை மீண்டும் குளிரூட்ட அதன் கம்ப்ரஸர் (Compressor) ஓய்வில்லாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். கம்ப்ரஸர் எவ்வளவு நேரம் ஓடுகிறதோ, அவ்வளவு யூனிட் மின்சாரம் வீணாகும். இதுதான் உங்கள் கரண்ட் பில் எகிற முக்கியக் காரணம் ஆகும்.

இதையும் படிங்க: சிக்கன், மட்டன், மீன் எத்தனை நாட்கள் ஃபிரிட்ஜில் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்?: https://tamil.asianetnews.com/gallery/health-food/how-long-can-chicken-mutton-and-fish-stay-fresh-in-the-fridge-nyd27mu

44
இதற்கு தீர்வு என்ன?
Image Credit : Chatgpt

இதற்கு தீர்வு என்ன?

பேப்பர் எளிதாக வெளியே வந்துவிட்டால், உடனடியாக அந்த ரப்பர் பீடிங்கை மாற்ற வேண்டும். ஆன்லைனிலோ அல்லது உங்கள் ஊரில் இருக்கும் கடையிலோ மிகக் குறைந்த விலையில் ரப்பர் பீடிங் கிடைக்கும். இதை மாற்றுவதன் மூலம் கம்ப்ரஸரின் வேலைப்பளு குறைந்து, மின்சாரக் கட்டணம் கணிசமாக மிச்சமாகும். நீங்கள் மாதம் ஒருமுறை இந்த 30 வினாடி சோதனையைச் செய்து பாருங்கள். இதன் மூலம் மின்சார கட்டணம் எகிறாமல் தடுத்து உங்கள் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Fridge Odor: பிரிட்ஜ் துர்நாற்றத்தை போக்க இதை மட்டும் உள்ளே வையுங்க
Recommended image2
Vastu Remedies: எடுத்த காரியம் ஜெயிக்கலையா? வீட்டு வாசலில் ஒரு சிட்டிகை மஞ்சள் நீர் தெளிச்சு பாருங்க
Recommended image3
Vastu Shastra: இறந்தவர்களின் புகைப்படத்தை வீட்டில் எங்கு வைக்கக் கூடாது? இதை மீறினால் என்ன நடக்கும்?
Related Stories
Recommended image1
Fridge Mistakes: ஃப்ரிட்ஜில் வைக்கும் பழக்கம்தான் பிரச்சினையா? பலரும் செய்யும் பெரிய தவறு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved