MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Water Tank Cleaning Tips: ஆயிரக்கணக்கில் செலவின்றி வாட்டர் டேங்க் சுத்தம் செய்ய 3 எளிய வழிகள்!

Water Tank Cleaning Tips: ஆயிரக்கணக்கில் செலவின்றி வாட்டர் டேங்க் சுத்தம் செய்ய 3 எளிய வழிகள்!

Water Tank Cleaning Tips: நமது வீட்டில் இருக்கும் வாட்டர் டேங்கை ஆயிரக்கணக்கில் பணம் செலவழிக்காமல், கையைக்கூட நனைக்காமல் 3 எளிய வழியில் சுத்தம் செய்யலாம். அது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jun 30 2026, 06:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வாட்டர் டேங்கை சுத்தம் செய்யும் எளிய 3 வழிகள்
Image Credit : AI

வாட்டர் டேங்கை சுத்தம் செய்யும் எளிய 3 வழிகள்

இப்போது சொந்த வீடு வைத்திருப்பவர்கள் முதல் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் வரை சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை 'வாட்டர் டேங்க்' சுத்தம் செய்வதுதான். நாம் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியில் பாசி படிவதும், அடியில் வண்டல் மண் தேங்குவதும் இயல்பான ஒன்று. இதற்காக அடிக்கடி ஆட்களைத் தேடி அலைந்து, ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டியதில்லை. கையைக்கூட நனைக்காமல், மிக எளிய முறையில் உங்கள் வீட்டு தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யலாம். அது குறித்து விரிவாக பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சைஃபோன்’ (Siphon) முறை - கையே வைக்காமல் அடியிலுள்ள மண்ணை எடுக்கலாம்!
Image Credit : Gemini AI

சைஃபோன்’ (Siphon) முறை - கையே வைக்காமல் அடியிலுள்ள மண்ணை எடுக்கலாம்!

வாட்டர் டேங்கில் தண்ணீர் நிறைய இருக்கும்போது, அடியில் தேங்கியிருக்கும் வண்டல் மண்ணை மட்டும் எடுக்க இந்த முறை உதவும்.

* ஒரு நீளமான கார்டன் ஹோஸ் (Garden Hose) குழாயை எடுத்துக்கொள்ளுங்கள்.

* அதன் ஒரு முனையை டேங்கின் அடியில் உள்ள மண்ணிற்கு அருகில் கொண்டு செல்லுங்கள்.

* மறுமுனையை கீழே உள்ள மொட்டை மாடி தரையிலோ அல்லது ட்ரெய்னேஜிலோ விட்டு, லேசாக உறிஞ்சி தண்ணீரை வரவழையுங்கள்.

* இப்போது வேக்யூம் கிளீனர் போல, டேங்கின் அடியில் உள்ள மொத்த சேறும், கையே வைக்காமல் குழாய் வழியே வெளியேறிவிடும்.

Related Articles

Related image1
Water Heater Maintenance Tips : பாத்ரூம்ல வாட்டர் ஷீட்டர் இருக்கா? கண்டிப்பா 'இதை' தெரிஞ்சுக்கோங்க! ஆபத்தை தவிர்க்கும் டிப்ஸ்
Related image2
கோடை வெயிலில் வாட்டர் டேங்க் சூடாகிறதா? கூலாக இருக்க உடனே இதை மட்டும் செஞ்சு பாருங்க!
34
வாட்டர் டேங்க் க்ளீனிங் பம்ப் (Cleaning Pump)
Image Credit : social media

வாட்டர் டேங்க் க்ளீனிங் பம்ப் (Cleaning Pump)

இன்று ஆன்லைனில் மிகக் குறைந்த விலையில் (Hand Pump/Submersible Pump) இதற்கான உபகரணங்கள் கிடைக்கின்றன. தண்ணீரை வீணாக்காமல், அடியில் உள்ள அழுக்கை மட்டும் உறிஞ்சும் சிறிய மோட்டார்கள் இவை. டேங்கிற்குள் இறங்காமல், மேலிருந்தபடியே இந்த பம்பை இயக்கி சில நிமிடங்களில் மொத்த கசடுகளையும் எளிதில் வெளியேற்றிவிடலாம்.

44
இயற்கையான பாசி நீக்கி (Algae Remover)
Image Credit : Gemini AI

இயற்கையான பாசி நீக்கி (Algae Remover)

வாட்டர் டேங்கின் பக்கவாட்டுச் சுவர்களில் பாசி படிவதைத் தடுக்க, டேங்க் காலியாக இருக்கும் நேரத்தில், நீண்ட கைப்பிடி கொண்ட பிரஷ்ஷில் சிறிதளவு வினிகர் மற்றும் பேக்கிங் சோடா கலவையைத் தெளித்து தேய்க்கலாம். கை படாமல், மேலிருந்தபடியே நீண்ட குச்சி மூலம் இதைச் செய்யலாம். இது பாசியை வேரோடு அழித்து, மீண்டும் வராமல் தடுக்கும்.

முக்கிய குறிப்பு: தண்ணீரில் கிருமிகள் அழிய பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தும் போது, 1000 லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் அதாவது ஒரு டேபிள் ஸ்பூன் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் தோலில் அரிப்பு ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
நீர் சேமிப்பு குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Peace Lily: பீஸ் லில்லி செடியை வீட்டில் வளர்ப்பதால் கிடைக்கும் 7 நன்மை
Recommended image2
Relationship Tips: இந்த 5 விஷயங்கள் கணவன்-மனைவி இடையே தான் இருக்கணும்.. வெளியே போனா வாழ்க்கை காலி!
Recommended image3
Crow Intelligence: மனித முகங்களை மனதில் வைத்துக்கொள்ளும் காகங்கள்..! ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள்!
Related Stories
Recommended image1
Water Heater Maintenance Tips : பாத்ரூம்ல வாட்டர் ஷீட்டர் இருக்கா? கண்டிப்பா 'இதை' தெரிஞ்சுக்கோங்க! ஆபத்தை தவிர்க்கும் டிப்ஸ்
Recommended image2
கோடை வெயிலில் வாட்டர் டேங்க் சூடாகிறதா? கூலாக இருக்க உடனே இதை மட்டும் செஞ்சு பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved