- Home
- Lifestyle
- Water Heater Maintenance Tips : பாத்ரூம்ல வாட்டர் ஷீட்டர் இருக்கா? கண்டிப்பா 'இதை' தெரிஞ்சுக்கோங்க! ஆபத்தை தவிர்க்கும் டிப்ஸ்
Water Heater Maintenance Tips : பாத்ரூம்ல வாட்டர் ஷீட்டர் இருக்கா? கண்டிப்பா 'இதை' தெரிஞ்சுக்கோங்க! ஆபத்தை தவிர்க்கும் டிப்ஸ்
உங்கள் வீட்டு பாத்ரூமில் வாட்டர் ஹீட்டர் இருந்தால் கட்டாயம் சில விஷயங்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அவை என்ன என்பது குறித்து இங்கு காணலாம்.

Water Heater Maintenance Tips
தற்போது பெரும்பாலானோர் தங்களது வீடுகளில் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்துகின்றனர். வாட்டர் ஹீட்டர் வந்த பிறகு குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பது எளிதாக மாறிவிட்டது என்றாலும், அதை நாம் பயன்படுத்தும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் சில நேரங்களில் ஆபத்துகளை ஏற்படுத்தும். எனவே, இந்த பதிவில் பாத்ரூமில் இருக்கும் வாட்டர் ஹீட்டர் சரியாக பயன்படுத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஸ்விட்சை ஆன் செய்து குளிக்காதே!
பெரும்பாலானோர் செய்யும் மிகப்பெரிய தவறு இதுதான். அதாவது குளிக்கும்போது வாட்டர் ஹீட்டர் ஆன் செய்து குளிப்பது. இது பாதுகாப்பான முறை அல்ல. தண்ணீர் சூடான பிறகு ஹீட்டரை ஆப் செய்து குளிப்பது தான் சரியான வழி. மேலும் இப்படி செய்தால் மின்சாரமும் மிச்சமாகும்.
குளிக்கும் அறையில் காற்றோட்டம் அவசியம் :
நீங்கள் உங்களது குளியலறையில் வாட்டர் ஹீட்டர் வைக்கிறீர்கள் என்றால் அங்கு காற்றோட்டமாக இருப்பது மிகவும் அவசியம். ஏனெனில் சில சமயங்களில் வாட்டர் ஹீட்டரில் இருந்து வாயுகசிவு ஏற்படும். இத்தகைய சூழ்நிலையில் குளியலறையில் காற்றோட்டம் இல்லை என்றால் உள்ளே குளிக்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குளியலறை ஜன்னலை திறந்து வையுங்கள் அல்லது ஒரு எக்ஸாட் ஃபேனை பொருத்துங்கள்.
அதிக வெப்பம் வேண்டாம்:
சில விரைவாக சூடான நீரை பெற ஹீட்டர் வெப்பநிலையை அதிகமாக்குகிறார்கள். ஆனால் இப்படி செய்வது ரொம்பவே ஆபத்தானது. ஏனெனில் சில சமயங்களில் இதனால் வாட்டர் ஹீட்டர் வெடிக்கும். எனவே வாட்டர் ஹீட்டரின் வெப்பநிலையை எப்போதுமே நடுநிலையில் வையுங்கள்.
கசிவை சரிப்பார்க்கவும் :
வாட்டர் ஹீட்டரில் தண்ணீர் கசிந்தாலோ அல்லது ஹீட்டரை ஆன் செய்யும்போது தீப்பொறி ஏற்பட்டாலும் உடனே அதை பழுது பார்த்து விடுங்கள். அப்போதுதான் ஆபத்துகள் ஏதேனும் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
வாட்டர் ஹீட்டரை பொருத்தும் இடம்
குளியலறையில் வாட்டர் ஹீட்டர் வைக்கப் போகிறீர்கள் என்றால் அதை எப்போதும் மேற்பரப்பில் பொருத்துங்கள். அப்போதுதான் குளிக்கும் போது வாட்டர் ஹீட்டர் மேல் தண்ணீர் படாது. ஒருவேளை தண்ணீர் வாட்டர் ஹீட்டர் மேற்பட்டால் அது விரைவில் சேதமடையும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

